Bright Zoom Today News ஜுன் 08 மாலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
ஜுன் 08 மாலை நேரச் செய்திகள்


தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் - முக்கியச் செய்திகள் !

உலகச் செய்திகள்
இந்திய தூதராக மோனிகா கபில் நியமனம் :

சுவிட்சர்லாந்து நாட்டுக்கான இந்திய தூதராக மோனிகா கபில் மோஹ்தா நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

உலக வானிலை ஆய்வு மையம் பாராட்டு :

ஆம்பன் புயல் ஏற்பட்ட நேரத்தில் துல்லியமான தகவலை கணித்து வழங்கிய இந்திய வானிலை ஆய்வு மையத்திற்கு உலக வானிலை ஆய்வு மையம் பாராட்டு தெரிவித்துள்ளது.
மாநிலச் செய்திகள்
அடுத்த 48 மணி நேரத்தில்... :

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

யானை இறப்பு தற்செயலான ஒன்று-மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் :

கேரளாவில், வெடிமருந்து வைக்கப்பட்ட அன்னாசிப்பழத்தை விழுங்கி யானை உயிரிழந்த சம்பவம், தற்செயலான ஒன்று என மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து நெரிசல் :

மும்பையில் தனியார் நிறுவனங்கள் செயல்படத் தொடங்கியதை அடுத்து சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.

தமிழக அரசு அனுமதி :

பத்திரப்பதிவுக்காக வழங்கப்படும் டோக்கனை, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான இ-பாஸ் ஆக பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு :

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வுபெறும் வயதை 59-ஆக உயர்த்தியதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

வழிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு :

தமிழகத்தில் வணிக நிறுவனங்கள், கடைகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை :

டெல்லியில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.
மாவட்டச் செய்திகள்
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 உயர்வு :

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,447க்கும், சவரன் ரூ.35,576க்கும் விற்பனையாகி வருகிறது.
விளையாட்டுச் செய்திகள்
முன்னாள் வீரர் பிரெஸ்னன் தெரிவிப்பு :

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை ஓவல் மைதானத்தில் அவுட்டாக்கும்போது, தனக்கு கொலை மிரட்டல் வந்ததாக முன்னாள் வீரர் பிரெஸ்னன் தெரிவித்துள்ளார்.



Bright Zoom Today News ஜுன் 08 மாலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  ஜுன் 08 மாலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on June 08, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.