Bright Zoom Today News
ஜுன் 11காலை நேரச் செய்திகள்
ரேஷன் கடைகளில் விலையில்லா மாஸ்க்... தமிழக அரசு - முக்கியச் செய்திகள் !
உலகச் செய்திகள்
ஆகஸ்ட் 5ஆம் தேதி:
இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3 மாதங்களுக்குப் பிறகு:
பாரிஸின் பிரபல சுற்றுலா தலமான ஈபிள் டவர் 3 மாதங்களுக்குப் பிறகு ஜூன் மாதம் 25ஆம் தேதி மீண்டும் திறக்கப்படவுள்ளது.
மாநிலச் செய்திகள்
அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக தமிழக பள்ளி கல்வித்துறை அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது.
விலையில்லா மாஸ்க்:
ரேஷன் கடைகளில் விலையில்லா மாஸ்க் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
பொது தரிசனம் தொடங்கியது:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 83 நாட்களுக்கு பின் பொது தரிசனம் தொடங்கியது.
மின்சார ரயில்களை இயக்க முதல்-மந்திரி வலியுறுத்தல்:
அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்காக மும்பையில் மின்சார ரயில்களை இயக்க வேண்டும் என மகாராஷ்டிர முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.
ஆன்லைன் வகுப்பு நடத்த தடை:
கர்நாடகத்தில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்த தடை விதிக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் அறிவித்துள்ளார்.
தமிழக அரசு அதிரடி அறிவிப்பு:
தமிழ்நாட்டிலுள்ள ஊர் பெயர்களை தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் அமைத்து பயன்படுத்தப்படும் என தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அறிவித்துள்ளது.
தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு திறன் பயிற்சி:
வெளிநாடுகள் மற்றும் இதர மாநிலங்களிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் தாங்கள் விரும்பும் திறன் பயிற்சி மற்றும் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பை பெற, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இணையதளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநரும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநருமான வே.விஷ்ணு தெரிவித்துள்ளார்.
மாவட்டச் செய்திகள்
கடன் பெற விண்ணப்பிக்கலாம்:
புதிய தொழில் முனைவோர், தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
ஐ.சி.சி. முடிவு:
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு நடத்துவதா? இல்லையா? என்பது குறித்து முடிவு செய்ய மேலும் ஒரு மாதம் காத்திருக்க ஐ.சி.சி. முடிவு செய்துள்ளது.
ஐ.பி.எல். தொடரை நடத்த பிசிசிஐ முயற்சி:
வருகிற நடப்பாண்டில் ஐ.பி.எல். தொடரை நடத்த பிசிசிஐ அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

Bright Zoom Today News ஜுன் 11காலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
June 11, 2020
Rating:
Reviewed by Bright Zoom
on
June 11, 2020
Rating:

No comments: