Bright Zoom Today News.
ஜுன் 11 மாலை நேரச் செய்திகள்
நாளை மாலைக்குள்... பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு - முக்கியச் செய்திகள் !
உலகச் செய்திகள்
இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவிப்பு:
விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முன்னோட்டமாக ஆளில்லா விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
மாநிலச் செய்திகள்
பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு:
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளி மாணவர்களின் வருகை பதிவேட்டை நாளை மாலைக்குள் மாவட்ட கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்க பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
தேர்வுத்துறை உத்தரவு:
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள், வருகைப் பதிவேடு உள்ளிட்ட விவரங்களை அனைத்து பள்ளிகளும் தயார் நிலையில் வைத்திருக்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு:
ஆந்திராவில் சலவைத் தொழிலாளிகள், சலூன் கடைக்காரர்கள் மற்றும் தையற்காரர்களுக்கு தலா ரூ.10,000 வழங்க முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
இலவச வகுப்புகள்:
நவம்பர் மாதம் நடக்க உள்ள சிஏ பவுண்டேஷன் தேர்வுக்கான இலவச வகுப்புகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை தொடங்கியுள்ளது.
அரசு அனுமதிக்க வேண்டும்:
காய்கறி மார்க்கெட், வணிக வளாகம், திருமண மண்டபங்களை திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார்.
மத்திய அரசு முடிவு:
ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதி மீதான தடையை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பக்தர்களுக்கு அனுமதியில்லை:
மாதாந்திர பூஜைக்காக வரும் 14ஆம் தேதி சபரிமலை திறக்கப்படும் போது பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் அறிவித்துள்ளார்.
விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்:
ஊர் பெயர் மாற்றம் செய்யப்பட்டதில் உள்ள குழப்பம் சரிசெய்யப்பட்டு விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
மாவட்டச் செய்திகள்
ஈரடுக்கு மேம்பாலம் திறப்பு:
சேலத்தில் ரூ.441 கோடி செலவில் கட்டுப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலத்தை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
விளையாட்டுச் செய்திகள்
ஜேம்ஸ் ஆண்டர்சன் வெளிப்புற மைதானத்தில் பயிற்சி:
முதன்முறையாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் வெளிப்புற மைதானத்தில் பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.
சச்சின் ஆலோசனை:
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பந்தை பளபளப்பாக்க எச்சில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால் சச்சின், ஒவ்வொரு 45 முதல் 50 ஓவர்கள் முடிந்ததும் பந்தை மாற்ற வேண்டும் என்று புதிய ஆலோசனையை வழங்கியுளனர்.

Bright Zoom Today News. ஜுன் 11 மாலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
June 11, 2020
Rating:
Reviewed by Bright Zoom
on
June 11, 2020
Rating:

No comments: