Bright Zoom Today News ஜுன் 12 மாலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
ஜுன் 12 மாலை நேரச் செய்திகள்


கட்டணம் செலுத்த பெற்றோரை நிர்பந்திக்கக்கூடாது.. மீறினால் அதிரடி உத்தரவு - செய்திகள் !

உலகச் செய்திகள்
பதற்றத்தை தணிக்க இருநாடுகளும் நடவடிக்கை:

லடாக் எல்லையில் பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கைகளை சீனாவும், இந்தியாவும் எடுத்து வருவதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

10,000 பார்வையாளர்கள் வரை அனுமதி:

ஆஸ்திரேலியாவில் விளையாட்டு போட்டிகளை காண சிறிய அரங்குகளில் 10,000 பார்வையாளர்கள் வரை அனுமதிக்கப்படுவர் என்று பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார்.

வருகிற 18ஆம் தேதி பேச்சுவார்த்தை:

வெட்டுக்கிளி பிரச்சனையை எதிர்கொள்வது தொடர்பாக இந்தியா-பாகிஸ்தான் இடையே வருகிற 18ஆம் தேதி பேச்சுவார்த்தை நடக்க இருக்கிறது. தொழிநுட்ப ரீதியான நடவடிக்கைகள் குறித்த பேச்சுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

மாநிலச் செய்திகள்
அடுத்த 24 மணி நேரத்தில்:

தமிழகம், புதுச்சேரியில் தென்மேற்குப் பருவக்காற்றால் அடுத்த 24 மணி நேரத்தில் ஒருசில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பள்ளிகளின் மீது நடவடிக்கை:

ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கு கட்டணம் செலுத்த பெற்றோரை நிர்பந்திக்கக்கூடாது எனவும், கட்டணம் செலுத்த சொல்லி நிர்ப்பந்திக்கும் தனியார் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் இன்று முதல்:

தமிழகத்தில் இன்று முதல் திருச்சி-செங்கல்பட்டு, அரக்கோணம்-கோவை ஆகிய இரண்டு வழித்தடங்களில் 3 சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டன.

உள்;ர் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி:

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவிலில் உள்;ர் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

1,523 கோடி ரூபாய் திரட்ட திட்டம்:

பாரத ஸ்டேட் வங்கி, எஸ்பிஐ லைஃப் நிறுவனத்தில் அதற்குள்ள பங்குகளில் ஒருபகுதியை விற்று 1,523 கோடி ரூபாய் திரட்டத் திட்டமிட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றம்:

சுகாதாரத்துறை செயலாளர் பொறுப்பில் இருந்து பீலா ராஜேஷ் திடீரென மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் புதிய சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்:

கல்லூரி தேர்வுகளை ரத்து செய்வது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார்.
மாவட்டச் செய்திகள்
ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்:

3 மாதமாக ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் இன்று போராட்டம் நடத்தினார்கள்.

விளையாட்டுச் செய்திகள்
பிசிசிஐ தெரிவிப்பு:

இலங்கை மற்றும் ஜிம்பாப்வே தொடர்களில் இந்திய அணி பங்கேற்காது என பிசிசிஐ தெரிவித்துள்ளது.



Bright Zoom Today News ஜுன் 12 மாலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  ஜுன் 12 மாலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on June 12, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.