Bright Zoom Today News ஜூன் 13 காலை நேரச் செய்திகள்..!!

Bright Zoom Today News
ஜூன் 13 காலை நேரச் செய்திகள்..!!


வரும் 16, 17ஆம் தேதிகளில்... பிரதமர் முக்கிய ஆலோசனை - முக்கியச் செய்திகள்..!!

உலகச் செய்திகள்
முகக்கவசங்களை இலவசமாக வழங்க முடிவு:

அமெரிக்காவில் ரயில் மற்றும் விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளுக்காக 96 மில்லியன் முகக்கவசங்களை இலவசமாக வழங்க அந்நாடு முடிவு செய்துள்ளது.

மாநிலச் செய்திகள்
5 முன்னணி நிறுவனங்களுக்கு முதல்வர் கடிதம்:

நுகர்வோர் பொருட்கள் உற்பத்தியில் உலகளவில் தலைசிறந்த 5 முன்னணி நிறுவனங்களுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

வரும் 16, 17ஆம் தேதிகளில் முக்கிய ஆலோசனை:

அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி வரும் 16ஆம் தேதி மற்றும் 17ஆம் தேதிகளில் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.

சிறு வணிகர்களுக்கு மிகப் பெரும் நிவாரணம்... மத்திய நிதியமைச்சர்:

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தாக்கல் செய்வதில் சிறு வணிகர்களுக்கு மிகப் பெரும் நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. தாமதமாக ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கு விதிக்கப்படும் அபராதம் அதிகபட்சம் ரூ.500 ஆக குறைக்கப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு:

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

போட்டியின்றி தேர்வு:

கர்நாடக மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்ட தேவேகவுடா, மல்லிகார்ஜுன கார்கே உட்பட 4 பேரும் போட்டியின்றி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பாரத ஸ்டேட் வங்கி மீண்டும் அறிமுகம்:

யோனோ செயலியை பயன்படுத்தி ஆன்லைனில் கணக்கை தொடங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக ஆதார் அடிப்படையிலான உடனடி சேமிப்பு கணக்கு தொடங்கும் வசதியை பாரத ஸ்டேட் வங்கி மீண்டும் நேற்று அறிமுகப்படுத்தியது.

ரிசர்வ் வங்கி திட்டம்:

வங்கித் துறையில் சிறந்த நிர்வாகத்தை உறுதிப்படுத்தும் வகையில், அதன் தலைமை செயல் அதிகாரிகள் (சிஇஓ) மற்றும் முழுநேர இயக்குநர்களின் வயது உச்ச வரம்பை 70 ஆக நிர்ணயிக்கவும், அந்தப் பணியிடங்களில் ஒருவரை அதிகபட்சம் 10 ஆண்டுகள் மட்டும் பணியமர்த்தவும் ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

மாவட்டச் செய்திகள்
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சிறப்பு கடனுதவி திட்டம்:

சேலம் மாவட்டம் எடப்பாடியில் நேற்று நடந்த விழாவில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சிறப்பு கடனுதவி அளிக்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

ஜூன் 16ஆம் தேதி தண்ணீர் திறப்பு:

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியை மேற்கொள்ள மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதை விவசாயிகள் வரவேற்றுள்ளனர். கல்லணையில் இருந்து ஜூன் 16ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

விளையாட்டுச் செய்திகள்
இங்கிலாந்து போட்டி தொடர்:

இங்கிலாந்து தொடருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. புதுமுக வீரர் ஹைதர் அலி, முன்னாள் கேப்டன் சர்ப்ராஸ் அகமது ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.



Bright Zoom Today News ஜூன் 13 காலை நேரச் செய்திகள்..!! Bright Zoom Today News  ஜூன் 13 காலை நேரச் செய்திகள்..!! Reviewed by Bright Zoom on June 13, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.