Bright Zoom Today News ஜுன் 13 மாலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
ஜுன் 13 மாலை நேரச் செய்திகள்


டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடத்த வாய்ப்பு இல்லை - முக்கியச் செய்திகள் !

உலகச் செய்திகள்
2023ஆம் ஆண்டிற்குப் பிறகு:

இந்தியாவும், ஜப்பானும் இணைந்து மேற்கொள்ளும் நிலவின் தரையில் ஆய்வூர்தியை இறக்கி ஆய்வு செய்யும் திட்டம் 2023ஆம் ஆண்டிற்கு பிறகு செயல்படுத்தப்படும் என்று ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஜாக்சா தெரிவித்துள்ளது.

மனிதர்களின் விண்வெளி பயணத்திட்டம்:

மனிதர்களின் விண்வெளி பயணத்தில் முதன்முறையாக கேத்தி லூடர்ஸ் என்ற பெண் ஒருவரை தலைமை அதிகாரியாக நாசா நியமித்துள்ளது.
மாநிலச் செய்திகள்
அனைத்து அரசு அலுவலகங்களிலும் தூய்மைப்பணி:

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் கிருமிநாசினி தெளித்துத் தூய்மைப்படுத்தப்படுகின்றன.

டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடத்த வாய்ப்பு இல்லை:

தமிழகத்தில் தற்போது டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடத்த வாய்ப்பு இல்லை என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு:

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சாலைவழி சரக்குப் போக்குவரத்து தொடக்கம்:

மேற்கு வங்கத்தில் இந்தியா-வங்கதேசம் இடையே சாலை வழியான வணிகம் 3 மாதங்களுக்குப் பின் மீண்டும் தொடங்கியுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை திட்டம்:

தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு கணித ஆசிரியர்களை திறன்மிக்கவர்களாக மாற்ற ஆன்லைன் சிறப்பு பயிற்சிக்கு பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

நாளை ஆலோசனை:

டெல்லி துணைநிலை ஆளுநர் மற்றும் முதல்வர் கெஜ்ரிவாலுடன் அமித்ஷா, ஹர்ஷ்வர்தன் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

மாவட்டச் செய்திகள்
6 மண் தொட்டிகள் கண்டுபிடிப்பு:

கீழடி 6-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சியில் பூந்தொட்டி வடிவில் 6 மண் தொட்டிகள் கண்டறியப்பட்டுள்ளன.

இ-பாஸ் வழங்க இயலாது:

திருநள்ளாறு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காக தனியாக இ-பாஸ் வழங்க இயலாது என்று காரைக்கால் துணை ஆட்சியர் ஆதர்ஸ் தெரிவித்துள்ளார்.

நேதாஜி மார்க்கெட் மீண்டும் மூடல்:

வேலூரில் நாளை முதல் நேதாஜி மார்க்கெட் மீண்டும் மூடப்படுவதாக மாவட்ட வருவாய் அலுவலர் அறிவித்துள்ளார்.

விளையாட்டுச் செய்திகள்
சர்வதேச தரவரிசை:

இந்தியக் கால்பந்து அணி சர்வதேச தரவரிசையில் 108-வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இந்திய அணியுடன் விளையாடுவது ஒரு கடினமான போர்:

டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தியாவுடன் விளையாடுவது ஒரு கடினமான போர் தான் என்று பதிவு செய்துள்ளார்.

Bright Zoom Today News ஜுன் 13 மாலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  ஜுன் 13 மாலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on June 13, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.