Bright Zoom Today News ஜுன் 15 மாலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
ஜுன் 15 மாலை நேரச் செய்திகள்


வரும் 19ஆம் தேதி முதல்.. 4 மாவட்டங்களுக்கு.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு - செய்திகள்..!!

உலகச் செய்திகள்
அதிக எண்ணிக்கையிலான அணு ஆயுதங்கள்:

சீனா மற்றும் பாகிஸ்தானிடம், இந்தியாவை விட அதிக எண்ணிக்கையிலான அணு ஆயுதங்கள் இருப்பதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சர்வதேச யோகா தினம்:

அமெரிக்காவில் வரும் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினத்தை வீடுகளில் இருந்தவாறு கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.

மாநிலச் செய்திகள்
வானிலை ஆய்வு மையம்:

அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, தேனி, திருவள்ள ர் மாவட்டங்களிலும், வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை:

மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு:

வீட்டு இணைப்புக்கான மின்சார அளவைக் கணக்கிடுவது குறித்த மின் வாரியத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாவட்டச் செய்திகள்
ஜூன் 19ஆம் தேதி முதல் 12 நாட்கள் :

சென்னை, திருவள்ள ர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன் 19ஆம் தேதி முதல் 12 நாட்கள் முழு பொது முடக்கம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அந்த பகுதிகளில், காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு சமூக இடைவெளியுடன் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடமாடும் காய்கறி, பழ விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தாங்கள் இருக்கும் பகுதிக்கு உள்ளேயே அத்தியாவசிய பொருட்களை வாங்க அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும்:

சென்னை உட்பட 4 மாவட்டங்களில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அரசுப் பணியாளர்கள் அலுவலகம் வரத் தேவையில்லை:

சென்னையில் மீண்டும் பொதுமுடக்க அறிவிப்பினை அடுத்து, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மத்திய, மாநில அரசுப் பணியாளர்கள் அலுவலகம் வரத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுச் செய்திகள்
கிரிக்கெட் போர்டின் தலைமை நிர்வாகி நீக்கப்படுகிறார்:

கிரிக்கெட் ஆஸ்திரேலியா போர்டின் தலைமை நிர்வாகி கெவின் ராபர்ட்ஸை நீக்கி விட்டு இடைக்கால அதிகாரியை நியமிக்க போர்டின் உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தி வருவதாக ஆஸ்திரேலியாவில் இருந்து வெளிவரும் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. புதன்கிழமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என அந்த பத்திரிக்கை தெரிவித்துள்ளது.



Bright Zoom Today News ஜுன் 15 மாலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  ஜுன் 15 மாலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on June 15, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.