Bright Zoom Today News ஜுன் 16 காலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
ஜுன் 16 காலை நேரச் செய்திகள்


அனைத்து மாநில முதல்வர்களுடன்... இன்று பிரதமர் ஆலோசனை - முக்கியச் செய்திகள் !

உலகச் செய்திகள்
நேபாளம் ஒப்புதல்:

எல்லையில் கூடுதலாக 100 எல்லை பாதுகாப்பு புறக்காவல் நிலையங்களை அமைக்க நேபாளம் ஒப்புதல் அளித்து உள்ளது.

ஆஸ்கார் விருது வழங்கும் விழா தள்ளிவைப்பு:

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற இருந்த ஆஸ்கர் நிகழ்ச்சிகள் இரண்டு மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மாநிலச் செய்திகள்
ரூ.1000 நிவாரணம்:

அடையாள அட்டை வைத்திருக்கும் 13.35 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை:

அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் துணை நிலை கவர்னர்களுடன் இன்றும் (ஜூன் 16), நாளையும் (ஜூன் 17) பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.

வரும் 19ஆம் தேதி முதல்:

சமீபத்தில் துவங்கிய சின்னத்திரை படப்பிடிப்பு வரும் 19ஆம் தேதி முதல் மீண்டும் நிறுத்தி வைக்கப்படுவதாக, பெப்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

வரும் 21ஆம் தேதி... தரிசனம் ரத்து :

திருமலை ஏழுமலையான் கோவிலில் வரும் 21ஆம் தேதி சூரிய கிரகணம் அன்று, பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளதாக, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியீடு:

கைத்தறி மற்றும் நெசவாளர்களுக்கு தலா ரூ.2,000 வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

ஜூலை 1ஆம் தேதி முதல்:

மகாராஷ்டிராவில் ஜூலை 1ஆம் தேதி முதல் 9, 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டம்:

புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 11 திட்டப்பணிகளை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.

அவசரகால கடன்... ரூ.3 லட்சம் கோடி:

பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அவசரகால கடனுதவியாக ரூ.3 லட்சம் கோடி கிடைப்பதை உறுதி செய்யுமாறு தனியார் வங்கிகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.

ஆசிரியர்கள் ஆர்வம்:

பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஜூன் 22ஆம் தேதி முதல் 10 நாட்கள் இணைய வழியில் நடைபெறவுள்ள கணிதப் பயிற்சியில் பங்கேற்க அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர்.

மாவட்டச் செய்திகள்
தெற்கு ரயில்வே அறிவிப்பு:

திருச்சி-செங்கல்பட்டு இடையிலான ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

1,500 மருத்துவர்கள் அவசரமாக அழைப்பு:

மருத்துவர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 1,500 மருத்துவர்கள் அவசரமாக அழைக்கப்பட்டுள்ளனர்.
விளையாட்டுச் செய்திகள்
லா லிகா கால்பந்து போட்டி:

லா லிகா கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

வாசிம் ஜாபர் வலியுறுத்தல்:

இந்த சீசனுக்கான துலீப், தியோதர் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் வலியுறுத்தி உள்ளார்.

Bright Zoom Today News ஜுன் 16 காலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  ஜுன் 16 காலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on June 16, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.