Bright Zoom Today News ஜுன் 20 மாலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
ஜுன் 20 மாலை நேரச் செய்திகள்


அக்டோபர் 1ஆம் தேதி முதல்.. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் - செய்திகள்..!!

உலகச் செய்திகள்
அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தின் இயக்குநராக நியமனம்:

இந்திய-அமெரிக்க விஞ்ஞானி டாக்டர் சேதுராமன் பஞ்சநாதன் என்ற சென்னையை சேர்ந்த தமிழரை அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தின் இயக்குநராக அமெரிக்க செனட் தேர்வு செய்துள்ளது.

புதிய சேவை அறிமுகம்:

அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய தூதரகம் மற்றும் துணைத்தூதரகம் சார்பில் செயல்படும் பாஸ்போர்ட் சேவை மையங்களில் (பிஎல்ஸ் இண்டர்நேசனல் சென்டர்ஸ்) புதிய சேவை தொடங்கப்பட்டுள்ளது.

மாநிலச் செய்திகள்
இந்திய வீரர்களின் உயிர் தியாகம் வீண்போகாது:

எந்த விலை கொடுத்தும் நாட்டின் இறையாண்மையை பாதுகாப்போம் என்பதையே, கால்வன் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்களின் வீரம்செறிந்த நடவடிக்கை காட்டுவதாக, விமானப் படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா கூறியுள்ளார். இந்திய வீரர்களின் உயிர் தியாகம் வீண்போக ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இணையம் வழியாக பதிவு செய்ய வசதி:

அமைப்புசாரா தொழிலாளர்கள் இனி இணையம் வழியாகவே பதிவு செய்யும் வசதியை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, hவவிள:ஃஃடயடிழரச.வn.பழஎ.inஃ என்ற இணையதள முகவரியில் 17 வாரியங்களிலும் தங்களது பெயர்களை உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளும் வசதி தொழிலாளர் துறையால் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு திட்டம்.. தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி:

சொந்த ஊருக்கு திரும்பிய புலம் பெயர் தொழிலாளர்கள் பலன் பெறும் வகையில் நாட்டின் 6 மாநிலங்களில் உள்ள 116 மாவட்டங்களில் 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வேலைவாய்ப்பு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார்.

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்தப்படும்:

தமிழகத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 'ஒரே நாடு ஒரே ரேஷன்" திட்டம் செயல்படுத்தப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

நாளை திட்டமிட்டப்படி ஆன்லைன் நுழைவுத்தேர்வு:

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் ஆனுஇ ஆளுஇ ஆனுளு படிப்புகளுக்கான ஆன்லைன் நுழைவுத்தேர்வு நாளை திட்டமிட்டப்படி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டச் செய்திகள்
வெறும் கண்களால் பார்க்க வேண்டாம்:

தமிழகத்தில் நாளை தென்படும் நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை வெறும் கண்களில் காண வேண்டாம் என கொடைக்கானல் வான் இயற்பியல் தலைமை ஆராய்ச்சியாளர் செல்வேந்திரன் கேட்டு கொண்டுள்ளார்.

ஜூலை 15ஆம் தேதி வரை அவகாசம்:

பொது முடக்கம் அமலில் உள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த ஜூலை 15ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு காவல் நிலையங்கள் மூடல்:

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கிருமிநாசினி தெளித்து இரண்டு நாட்களுக்கு மூடிவைக்க எஸ்.பி. பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

விளையாட்டுச் செய்திகள்
விவோ ஐபிஎல் விளம்பரதாரர் ஒப்பந்தம் மறுஆய்வு:

சீனாவின் விவோ நிறுவனத்துடன் செய்துள்ள விளம்பரதாரர் ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்வதற்காக ஐபிஎல் நிர்வாகக்குழு கூட்டம் அடுத்த வாரம் நடைபெற உள்ளது.

Bright Zoom Today News ஜுன் 20 மாலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  ஜுன் 20 மாலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on June 20, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.