Bright Zoom Today News
ஜுன் 20 காலை நேரச் செய்திகள்
தமிழகத்தில் இன்று முதல்... வரும் 30ஆம் தேதி வரை - முக்கியச் செய்திகள் !
உலகச் செய்திகள்
அமெரிக்கா முடிவு:
ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் நாட்டு வீரர்களின் எண்ணிக்கையை 8,600 ஆக குறைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
அமெரிக்கா வலியுறுத்தல்:
மருத்துவ உபகரணங்கள், தொலைத்தொடர்பு சாதனங்களுக்கு சீனா, ரஷ்யாவை சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும் என்று நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
மாநிலச் செய்திகள்
இன்று முதல் வரும் 30ஆம் தேதி வரை:
தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 30ஆம் தேதி வரை ஹோட்டல்களில் பார்சல்கள் மட்டுமே வழங்கப்படும் என்று தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளது.
முதல்வர் விருதிற்கு தேர்வு:
தமிழக காவல்துறையின் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டிஐஜி, இரு எஸ்.பி.க்கள் உட்பட 5 அதிகாரிகள் முதல்வர் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு தெரிவிப்பு:
நியாய விலைக் கடைகளின் மூலம் இதுவரை ரூ.37.77 கோடிக்கு மளிகைப் பொருள் தொகுப்புகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
8 இடங்களை தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றியது:
மாநிலங்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் 8 இடங்களை தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றியுள்ளது. காங்கிரசுக்கும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரசுக்கும் தலா நான்கு இடங்கள் கிடைத்தன.
கூடுதல் விலைக்கு மது விற்றால் கடும் நடவடிக்கை:
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்றால் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது குறித்து மண்டல மாவட்ட மேலாளர்கள் தீவிர ஆய்வில் ஈடுபட வேண்டும் என்றும் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் ஆர்.கிர்லோஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசு ஒப்புதல்:
மருத்துவப் படிப்புகளில் ஒபிசி பிரிவினருக்கு 27மூ இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மாவட்டச் செய்திகள்
1000 டன் பச்சை காய்கறிகள் வீணாகும்:
திருமழிசை சந்தை நாளை (ஜூன் 21) செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 1000 டன் பச்சை காய்கறிகள் வீணாகும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலவசமாக கிருமிநாசினி விநியோகம்:
வீடு வீடாக சென்று இலவசமாக கிருமிநாசினி விநியோகிக்கும் பணிகளில் செம்பாக்கம் நகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
நேதாஜி காய்கறி மார்க்கெட்:
வேலூர் நேதாஜி காய்கறி மார்க்கெட் வரும் ஜூன் 22ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
இத்தாலி கோப்பை:
இத்தாலி கோப்பைக்கான இறுதிப் போட்டியில் யுவென்டஸ் அணியை வீழ்த்தி 6வது முறையாக நபோலி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
தேசிய பேட்மிண்டன் சம்மேளனம் பரிந்துரை:
மத்திய அரசின் கேல் ரத்னா விருதிற்கு இந்திய முன்னணி பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்தின் பெயரை தேசிய பேட்மிண்டன் சம்மேளனம் பரிந்துரை செய்துள்ளது.

Bright Zoom Today News ஜுன் 20 காலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
June 20, 2020
Rating:

No comments: