Bright Zoom Today News
ஜுன் 29 மாலை நேரச் செய்திகள்
இ-பாஸ் இல்லாமல்... தமிழகத்திற்குள் அனுமதி இல்லை - முக்கியச் செய்திகள் !
உலகச் செய்திகள்
டோக்கியோவில் ஆர்ப்பாட்டம்:
சீனாவில் அதிபர் ஷி ஜின் பிங்கை மாற்றி விட்டு, ஜனநாயக முறைப்படி புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வலியுறுத்தி மனித உரிமை அமைப்புகள் டோக்கியோவில் ஆர்ப்பாட்டம் நடத்தின.
மாநிலச் செய்திகள்
தமிழகத்திற்குள் அனுமதி இல்லை:
இ-பாஸ் இல்லாமல் கர்நாடகாவிலிருந்து நடந்து வருவோர் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று சிறப்பு அதிகாரி பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
மழை பெய்ய வாய்ப்பு:
தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்:
தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல், கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்றும், இந்த பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
ஜூலை 31ஆம் தேதி வரை:
மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், மணிப்பூரில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து மகாராஷ்டிராவில் ஜூலை 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநில அரசு அதிரடி நடவடிக்கை:
சீன நிறுவனங்களுடன் செய்யப்பட்ட ரூ.2,900 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை பீகார் மாநில அரசு ரத்து செய்து அறிவித்துள்ளது.
மத்திய அரசு அனுமதி:
மாதத்திற்கு 50 லட்சம் தனிநபர் பாதுகாப்பு கவசங்களை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
பிளாஸ்மா வங்கி தொடக்கம்:
டெல்லியில் முதன்முறையாக பிளாஸ்மா வங்கியை உருவாக்க உள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
மாவட்டச் செய்திகள்
ஆய்வு செய்ய உத்தரவு:
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் அருகே இயங்கும் மருந்து நிறுவனத்தால் நீர் நிலைகளில் மாசு ஏற்படுகிறதா? என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய குழு அமைத்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
27 பேர் புதியதாக நியமனம்:
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு சிறப்பு உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர், காவலர்கள் உட்பட 27 பேரை நியமித்து எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் முடிவு:
இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது இனவெறிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் லோகோ அணிந்து விளையாட வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் முடிவு செய்துள்ளனர்.

Bright Zoom Today News ஜுன் 29 மாலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
June 29, 2020
Rating:
Reviewed by Bright Zoom
on
June 29, 2020
Rating:

No comments: