Bright Zoom Today News ஜுன் 30 காலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
ஜுன் 30 காலை நேரச் செய்திகள்


மத்திய அரசு தடை... ப்ளே ஸ்டோரில் இருந்து அதிரடி நீக்கம்... - முக்கியச் செய்திகள்...!!

உலகச் செய்திகள்
இன்று மீண்டும் பேச்சுவார்த்தை:

லடாக் மோதல் தொடர்பாக இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதன் மூலம் எல்லையில் அமைதி திரும்புமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

புதிய நீர் மின் திட்டம்:

இந்தியா-பூடான் இடையே, 600 மெகாவாட் திறனுள்ள புதிய நீர் மின் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

மாநிலச் செய்திகள்
தமிழகத்தில் ஜூலை 31ஆம் தேதி வரை:

தமிழகத்தில் ஜூலை 31ஆம் தேதி வரை பொதுமுடக்க உத்தரவை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று உத்தரவு பிறப்பித்தார். ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அதிரடி தடை:

டிக் டாக், ஹலோ, ஷேர் இட் உள்பட 59 சீன ஆப்-கள் கூகுளின் ப்ளே ஸ்டார் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. நேற்று மத்திய அரசு தடை விதித்ததை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனத்தினால் வட கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ரயில்களை இயக்க வேண்டாம்:

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் இருந்து மேற்குவங்கத்திற்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

ரயில்வே நிர்வாகம் தெரிவிப்பு:

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இயக்கப்படும் ஷ்ராமிக் ரயில்களின் தேவை இனி இருக்காது என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு:

மறைந்த நடிகர் அம்பரீசுக்கு நினைவு மண்டபம் அமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார்.

தமிழக அரசு அறிவிப்பு:

அந்தந்த மாவட்டத்திற்குள் இ-பாஸ் இல்லாமல் செல்ல அனுமதி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வெளிமாநிலங்களுக்கு சென்று வரவும், வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்குள் வரவும், மாவட்டங்களுக்கிடையே சென்று வரவும், இ-பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனவும் கூறியுள்ளது.

இன்று (ஜூன் 30) மாலை 4 மணிக்கு :

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இன்று (ஜூன் 30) மாலை 4 மணிக்கு உரையாற்றவுள்ளார்.

மாவட்டச் செய்திகள்
ஜூலை 6ஆம் தேதி முதல்:

சென்னையில் ஜூலை 6ஆம் தேதி முதல் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

பொறுப்பு அதிகாரி நியமனம்:

சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு பொறுப்பு அதிகாரியாக செந்தூர்ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டுச் செய்திகள்
உயர்மட்ட நடுவர் குழுவில் சேர்ப்பு:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) உயர்மட்ட நடுவர் குழுவில் இந்தியாவை சேர்ந்த நடுவர் நிதின் மேனன் சேர்க்கப்பட்டுள்ளார்.



Bright Zoom Today News ஜுன் 30 காலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  ஜுன் 30 காலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on June 30, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.