Bright Zoom Today News ஜுன் 30 மாலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
ஜுன் 30 மாலை நேரச் செய்திகள்



பிரதமர் உரை... இலவச ரேஷன் பொருட்கள்... நவம்பர் மாத இறுதி வரை... - செய்திகள்...!!

உலகச் செய்திகள்
பீரங்கிகளை நிறுத்திய இந்திய ராணுவம்...:

இந்திய-சீன எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சக்தி வாய்ந்த பீஷ்மா பீரங்கிகளை இந்திய ராணுவம் நிறுத்தியுள்ளது.

டிக் டாக் நிர்வாகம் தெரிவிப்பு...:

இந்திய அரசின் சட்டவிதிகளுக்கு உட்பட்டு செயல்பட தயாராக இருப்பதாக டிக் டாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. டிக் டாக் நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரி நிகில் காந்தி வெளியிட்ட அறிக்கையில் இந்திய பயனர்களின் எந்த தகவல்களையும் சீனா அரசு உட்பட எந்த வெளிநாட்டு அரசுடனும் பகிர்ந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா கவலை...:

டிக் டாக் மற்றும் வீசாட் உள்ளிட்ட 59 சீன ஆப்களை இந்திய அரசு தடுப்பதை பற்றி கவலைப்படுவதாகவும், நிலைமையை ஆராய்வதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

மாநிலச் செய்திகள்
தமிழக அரசு அரசாணை வெளியீடு...:

ஜூலை 31ஆம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீட்டிக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி உரை...:

பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன் உரை (மாலை 4 மணி)...

பிரதமர் முதல் சாமானியர் வரை அனைவருக்கும் நமது நாட்டில் ஒரே விதிதான். பிரதமரின் வறுமை ஒழிப்பு திட்டம் நவம்பர் மாத இறுதி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது.

நவம்பர் மாதம் இறுதி வரை அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். இன்னும் ஐந்து மாதங்களுக்கு ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்குவதற்காக ரூ.90,000 கோடி அதிகம் செலவிடப்பட உள்ளது.

பொதுமுடக்கத்தை பல இடங்களில் சரியாக பின்பற்றவில்லை என்று பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கூடுதல் முன்னெச்சரிக்கை தேவை எனவும் வலியுறுத்தியுள்ளார்.

பொதுமுடக்கம் உத்தரவு காரணமாக இந்தியா லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றியுள்ளது.

பருவமழை காலம் என்பதால் பொதுமக்கள் கவனமுடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையை பொதுமக்கள் சாதாரணமாக கருத வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு ஆலோசனை...:

சீன மொபைல்களுக்கு தடை விதிக்கும் திட்டத்தின் முன்னோடியாக, நாட்டில் 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாமா? வேண்டாமா? என்பது குறித்து உயர்மட்ட அளவிலான ஆலோசனையை மத்திய அரசு துவங்கி உள்ளது.

மாவட்டச் செய்திகள்
உடற்கூராய்வு அறிக்கை ஒப்படைப்பு...:

சாத்தான்குளம் தந்தை, மகன் ஆகியோரின் முதல்நிலை உடற்கூராய்வு அறிக்கை நெல்லை சரக டிஜிபி-யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பான ஆவணங்கள், நீதித்துறை நடுவரின் விசாரணை அறிக்கை ஆகியவையும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நாளை (ஜுலை 01) முதல் தண்ணீர் திறப்பு...:

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து நாளை (ஜுலை 01) முதல் தண்ணீர் திறக்கப்படுமென தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

விளையாட்டுச் செய்திகள்
நிகெல் லியாங்குக்கு பதில்...:

ஐ.சி.சி. எலைட் நடுவர்கள் குழுவில் 36 வயது நிதின் மேனன் இடம் பிடித்துள்ளார். இங்கிலாந்தின் நிகெல் லியாங்குக்கு பதிலாக இவர், எலைட் நடுவர் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார்.



Bright Zoom Today News ஜுன் 30 மாலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  ஜுன் 30 மாலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on June 30, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.