Bright Zoom Today News ஜுலை 01காலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
ஜுலை 01காலை நேரச் செய்திகள்


தமிழகம் முழுவதும்... இன்று முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தம் - செய்திகள் !

உலகச் செய்திகள்
விமானங்கள் பறப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை:

பாகிஸ்தான் விமானங்கள் தங்கள் பகுதியில் பறப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது. இன்று முதல் தொடங்கியுள்ள இந்த தடை 6 மாதங்களுக்கு நீடிக்கும் என ஐரோப்பிய ஒன்றிய வான் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய யூனியன் முடிவு:

சீனா உட்பட 15 நாடுகளுக்கு எல்லையை திறந்து விட ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது.

மாநிலச் செய்திகள்
தமிழக அரசு அறிவிப்பு:

தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே மற்றும் மாவட்டங்களுக்கு உள்ளே இருக்கும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் போக்குவரத்து இன்று முதல் ஜூலை 15ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கட்டணமில்லா சிகிச்சை:

சாலை விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கேரளாவில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு:

கேரளாவில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 98.82 சதவீத, மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டை விட 0.71 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகமாகும்.

வங்கி சேவைக்கு மீண்டும் கட்டணம்:

வங்கிகளின் சேவைகள் மற்றும் ஏ.டி.எம்-கள் போன்றவற்றில் வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகள் காலாவதியானதையடுத்து வங்கி கட்டணங்கள் இன்று (புதன்கிழமை) முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

டி.ஜி.பி.திரிபாதி உத்தரவு:

தமிழகம் முழுவதும் போலீசாருக்கு அறிவுப்பூர்வமான மனநல பயிற்சி அளிக்க டி.ஜி.பி.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

மத்திய அரசு தீவிரம்:

சீனாவின், 59 செயலிகளை தடை செய்திருக்கும் நிலையில் அடுத்தக்கட்டமாக டிவி, ஏர் கண்டிஷனர் உள்ளிட்ட 12 பொருட்களின் இறக்குமதியை குறைப்பது குறித்த நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இறங்கி உள்ளது.

மாவட்டச் செய்திகள்
கிராமப்புற கோவில்கள் திறப்பு:

சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் கிராமப்புற கோவில்கள் இன்று பக்தர்கள் வழிபடத் திறக்கப்பட்டன. தொழில் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட உள்ளன.

ஜூலை 31ஆம் தேதி வரை:

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜூலை 31ஆம் தேதி வரை மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் என வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.

வங்கிகளில் பொதுமக்களுக்கான சேவை கிடையாது:

சென்னை, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) முதல் 4ஆம் தேதி வரை வங்கிகளில் பொதுமக்களுக்கான சேவை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

135 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் பெரிய ஏரியில் இருந்து நாளை (வியாழக்கிழமை) முதல் 135 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

விளையாட்டுச் செய்திகள்
ஒருநாள் தொடர் ரத்து:

ஆகஸ்ட் 9ஆம் தேதி தொடங்கவிருந்த ஆஸ்திரேலியா-ஜிம்பாப்வே ஒருநாள் தொடர் ரத்து செய்யப்படுவதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Bright Zoom Today News ஜுலை 01காலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  ஜுலை 01காலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on July 01, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.