Bright Zoom Today News ஜுலை 25 காலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
ஜுலை 25 காலை நேரச் செய்திகள்


இன்று மாலை 5 மணி முதல்... திங்கட்கிழமை காலை 6 மணி வரை - செய்திகள்...!!

உலகச் செய்திகள்
சீன அரசு அதிரடி உத்தரவு:

சீன தூதரகத்தை மூடுவதற்கான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிராக சீனாவில் அமெரிக்க தூதரகத்தை மூட சீன அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாநிலச் செய்திகள்
நாளை தளர்வுகளற்ற முழு பொதுமுடக்கம்:

தமிழகத்தில் நாளை தளர்வுகளற்ற முழு பொதுமுடக்கம் என்பதால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருக்கும், மீறி ஊர் சுற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கும், ஆம்புலன்ஸ்களுக்கும், மருத்துவ சிகிச்சைகளுக்கு நோயாளிகளை அழைத்துச் செல்லும் தனியார் வாகனங்களுக்கும், அமரர் ஊர்திகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் முழு பொதுமுடக்கம் இப்போதைக்கு வாய்ப்பில்லை:

கேரளாவில் முழு பொதுமுடக்கம் இப்போதைக்கு வாய்ப்பில்லை என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

நில அளவீட்டு கட்டணம் நிர்ணயம்:

தமிழகத்தில் நில அளவீட்டு கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நன்செய் நிலத்தின் எல்லையை நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூ.50ல் இருந்து ரூ.2 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ரூ.67.9 கோடியை தமிழக அரசு செலுத்தியது:

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை கையகப்படுத்த வருமான வரித்துறைக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.67.9 கோடியை தமிழக அரசு செலுத்தியுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு:

தமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. சர்வதேச, தேசிய போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்கள் பயிற்சியில் ஈடுபடலாம் எனவும், 15 வயதிற்கும், 50 வயதிற்கும் மேற்பட்டோர் பயிற்சியில் ஈடுபட அனுமதி இல்லை எனவும் அரசு தெரிவித்துள்ளது.

மாவட்டச் செய்திகள்
இன்று மாலை 5 மணி முதல்:

கோவை மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை முழு பொதுமுடக்கம் கடைபிடிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. பால், மருந்தகங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் வழக்கம் போல் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளது.

தற்காலிக காய்கறி சந்தை:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் 140 கடைகள் அமைக்கப்பட்டு தற்காலிக காய்கறி சந்தை செயல்பட தொடங்கியது.
விளையாட்டுச் செய்திகள்
ஐ.பி.எல். சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் உறுதி:

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்க இருப்பதை ஐ.பி.எல். சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் உறுதி செய்துள்ளார்.

தென் கொரியா அரசு முடிவு:

பேஸ்பால் மற்றும் கால்பந்து போட்டிகளுக்கு ரசிகர்களை அனுமதிக்க தென் கொரியா அரசு முடிவு செய்துள்ளது.

கடைசி டெஸ்ட் போட்டி:

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நேற்று நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் பர்ன்ஸ், போப் அரைசதம் அடித்தனர்.

15 ஆண்டுகளுக்கு பிறகு:

போட்டிகளில் இருந்து விலகி ஓய்வில் இருந்த பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் 15 ஆண்டுகளுக்கு பிறகு செப்டம்பர் 12ஆம் தேதி ரோய் ஜோன்ஸ் ஜூனியருடன் மோத உள்ளார்.

Bright Zoom Today News ஜுலை 25 காலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  ஜுலை 25 காலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on July 25, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.