Bright Zoom Today News ஜுலை 01 மாலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
ஜுலை 01 மாலை நேரச் செய்திகள்


நெய்வேலி என்.எல்.சி விபத்து.. தலா ரூ.3 லட்சம் நிவாரணம்... முதல்வர் அறிவிப்பு - செய்திகள் !

உலகச் செய்திகள்
தொழில்நுட்ப சாதனங்களை வாங்க அமெரிக்கா தடை:

சீன தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஹுவேய் மற்றும் ZTE ஆகியவற்றிடம் இருந்து தொழில்நுட்ப சாதனங்களை வாங்க அமெரிக்கா தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மாநிலச் செய்திகள்
முதலமைச்சர் புகழாரம்:

தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உயிர் காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை தாம் இறைவனுக்கு நிகராக கருதுவதாக புகழாரம் சூட்டியுள்ளார்.

UPSC அறிவிப்பு:

சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு மையத்தை விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ள
upsconline.nic.in என்ற இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று UPSC அறிவித்துள்ளது.

சீன நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை:

இந்தியாவில் நெடுஞ்சாலை திட்டங்களில் சீன நிறுவனங்கள் பங்கேற்பதை அனுமதிக்க மாட்டோம் என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்:

கோவில்பட்டி கிளை சிறையில் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தமிழக டிஜிபி-க்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வெட்டுக்கிளிகளை அழிக்கும் பணியில் சென்னை டிரோன்கள்:

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவும் வெட்டுக்கிளிகளை விரட்டி அடிக்கும் பணியில் சென்னை அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி பிரிவு வடிவமைத்த டிரோன்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசு இந்த டிரோன்களின் செயல்பாட்டை வெகுவாக பாராட்டியிருப்பதாக டிரோன் ஆராய்ச்சி பிரிவின் இயக்குநர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

1088 ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவை துவக்கம்:

பல்வேறு வகையான உயிர் காக்கும் வசதிகளுடன் கூடிய 1088 ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி விஜயவாடாவில் இன்று துவக்கி வைத்தார்.

மாவட்டச் செய்திகள்
ரூ.3 லட்சம் நிவாரணம்:

நெய்வேலி என்.எல்.சி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

தளர்வுகள் வரும் 15ஆம் தேதி வரை ரத்து:

கன்னியாகுமரியில் அளிக்கப்பட்டிருந்த தளர்வுகள் வரும் 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே அறிவித்துள்ளார். கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்படும் எனவும் அறிவித்துள்ளார்.

வரலாறு காணாத அளவிற்கு உயர்வு:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.424 உயர்ந்து ரூ.37,472-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விளையாட்டுச் செய்திகள்
சிறந்த வீரர்கள் பட்டியல் வெளியீடு:

விஸ்டன் இதழ், பல்வேறு புள்ளி விவரங்கள் அடிப்படையில் 21ஆம் நூற்றாண்டின் சிறந்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஜடேஜாவை மிகவும் மதிப்புமிக்க இந்திய டெஸ்ட் வீரராக தேர்வு செய்துள்ளது.



Bright Zoom Today News ஜுலை 01 மாலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  ஜுலை 01 மாலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on July 01, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.