Bright Zoom Today News ஜுலை 02 காலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
ஜுலை 02 காலை நேரச் செய்திகள்


ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பு... தமிழக அரசு உத்தரவு - முக்கியச் செய்திகள் !

உலகச் செய்திகள்
அமெரிக்கா வரவேற்பு:

சீனாவின் மொபைல் செயலிகளுக்கு தடை விதித்த இந்தியாவின் நடவடிக்கையை வரவேற்பதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

போராட்டம் தீவிரம்:

ஹாங்காங்கில் சீனா அமல்படுத்தியுள்ள புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து போராட்டம் தீவிரமாகி உள்ளது.
மாநிலச் செய்திகள்
18 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது:

தென்மேற்கு பருவமழை ஜூன் மாதத்தில் இயல்பை விட 18 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. ஜூலையிலும் மழைப்பொழிவு சிறப்பாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு உத்தரவு:

மாநகராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை, மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும்:

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஜூலை 5ஆம் தேதி வரை:

பொதுமுடக்கம் காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் ஜூலை 5ஆம் தேதி வரை மூடப்படுவதாக பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

இன்று வெளியிடுவதாக அறிவிப்பு:

பல்கலைக்கழக மானியக்குழு, தேர்வுகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை விரைவில் அறிவிக்கப்போவதாக தெரிவித்து இருந்தது. அதன் அடிப்படையில் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்கள் வழிகாட்டு நெறிமுறைகளை இன்று வெளியிடுவதாக அறிவித்துள்ளன.

கேரள அமைச்சரவை ஒப்புதல்:

பேருந்து கட்டணத்தை 25 சதவீதம் வரை உயர்த்த கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசுப் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதால், தனியார் பேருந்து உரிமையாளர்களும் கட்டணத்தை உயர்த்த அரசிடம் அனுமதி கோரியுள்ளனர்.

இனிமேல் இ-பாஸ் தேவையில்லை:

மற்ற மாநிலங்களில் இருந்து கேரளாவிற்கு வரவும், கேரளாவிலிருந்து வெளியே செல்லவும் இனிமேல் இ-பாஸ் தேவையில்லை என கேரள அரசு அறிவித்துள்ளது.

மாவட்டச் செய்திகள்
நெல் பயிர் காப்பீடு திட்டம்:

நெல் பயிர் காப்பீடு திட்டத்தில் சேருமாறு, விவசாயிகளுக்கு கடலூர் மாவட்ட நல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கீதா அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று பதவியேற்பு:

சென்னை மாநகர காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் இன்று பதவியேற்றுக் கொள்கிறார். அனைத்து பொறுப்புகளையும் ஏ.கே.விஸ்வநாதன் ஒப்படைத்து விடைபெறுகிறார்.

இனி வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே:

நாமக்கல் மண்டலத்தில் இனி வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே முட்டை விலை நிர்ணயம் செய்யப்படும் என்று தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.

விளையாட்டுச் செய்திகள்
லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர்:

ஸ்பெயினில் நடக்கும் லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் பார்சிலோனா-அத்லெடிகோ மாட்ரிட் அணிகள் மோதிய லீக் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

ஷசாங் மனோகர் நேற்று விலகல்:

ஐ.சி.சி. தலைவர் பதவி காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து, பதவியில் இருந்து ஷசாங் மனோகர் நேற்று விலகினார்.

Bright Zoom Today News ஜுலை 02 காலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  ஜுலை 02 காலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on July 02, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.