Bright Zoom Today News
ஜுலை 02 மாலை நேரச் செய்திகள்
அடுத்த 24 மணி நேரத்தில்.. 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - செய்திகள் !
உலகச் செய்திகள்
அதிபர் வேட்பாளரான ஜோ பிடன் தெரிவிப்பு:
ஹெச்1 பி விசா மீது விதிக்கப்பட்டிருக்கும் தற்காலிக தடையை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நீக்குவேன் என்றும், உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் வசிக்கும் 11 மில்லியன் பேருக்கு குடியுரிமை வழங்குவேன் என்றும் அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபரும், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.
பச்சை மரகதக்கல் வெட்டியெடுக்கும் சுரங்கத்தில் விபத்து:
மியான்மர் நாட்டில் பச்சை மரகதக்கல் வெட்டியெடுக்கும் சுரங்கத்தில் நடந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 100ஆக உயர்ந்துள்ளது.
மாநிலச் செய்திகள்
அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு:
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் உத்தரவு:
10 லட்சம் பிசிஆர் பரிசோதனை கருவிகள் வாங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
25மூ விமான கட்டண சலுகை:
இந்தாண்டு இறுதி வரை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு 25மூ விமான கட்டண சலுகை வழங்கப்படுவதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் நடவடிக்கை:
மத்திய அரசின் உத்தரவின்படி நீட், JEE தேர்வுகளை நடத்துவது தொடர்பாக ஆலோசிக்க குழு அமைத்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நாட்டின் முதல் பிளாஸ்மா வங்கி:
நாட்டின் முதல் பிளாஸ்மா வங்கியை டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தொடங்கி வைத்துள்ளார்.
டிஜிட்டல் ஸ்டிரைக்:
59 சீன செயலிகளுக்கு தடை விதித்திருப்பது டிஜிட்டல் ஸ்டிரைக் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இன்று பதவியேற்பு:
மத்தியப்பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க ஆட்சியை கைப்பற்றி மூன்று மாதங்களாகும் நிலையில், 28 பேர் இன்று (ஜூலை 2) அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
மாவட்டச் செய்திகள்
இனி காணொளி காட்சியின் மூலம்:
சென்னை காவல் ஆணையராக இன்று பொறுப்பேற்றுக் கொண்ட மகேஷ்குமார் அகர்வால், இனி காணொளி காட்சியின் மூலம் பொதுமக்களிடம் புகார்களை பெற்று விசாரிக்க போவதாக தெரிவித்துள்ளார்.
நாளை கடையடைப்பு:
என்.எல்.சி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக நெய்வேலியில் நாளை கடையடைப்பு நடைபெறுகிறது. இதையடுத்து மருந்தகங்கள் தவிர அனைத்து கடைகளும் நாளை மூடப்படும் என வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
லாக்கப் டெத் என்பது தவிர்க்கப்பட வேண்டியது-ஐ.ஜி.முருகன்:
மதுரையில் புதிய தென்மண்டல காவல்துறை தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ஐ.ஜி.முருகன், லாக்கப் டெத் என்பது தவிர்க்கப்பட வேண்டியது என்று தெரிவித்துள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
டி20 கிரிக்கெட் லீக்:
ஐந்து அணிகள் கலந்து கொள்ளும் டி20 கிரிக்கெட் லீக்கை அடுத்த மாதம் நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
Bright Zoom Today News ஜுலை 02 மாலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
July 02, 2020
Rating:

No comments: