Bright Zoom Today News
ஜுலை 03 மாலை நேரச் செய்திகள்
ஜூலை மாதமும் இலவச ரேஷன் பொருட்கள்... தமிழக முதல்வர் அறிவிப்பு - செய்திகள்...!!
உலகச் செய்திகள்
ஜூன் மாதத்தில் 20 சதவீதம் உயர்வு:
பிரேசிலில் அமேசான் காடுகளில் ஏற்படும் தீ விபத்து கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவு ஜூன் மாதத்தில் 20 சதவீதம் உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
சீனாவிற்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்:
சீன நிறுவனங்களுடன் வங்கிகள் வணிகம் மேற்கொள்வதை தண்டனைக்கு உரியதாக்க வகை செய்யும் சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாநிலச் செய்திகள்
ஜூலை மாதமும் ரேஷன் பொருட்கள் இலவசம்:
தமிழகத்தில் வருகின்ற ஜூலை மாதமும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது போல் தற்போது ஒரு கிலோ சர்க்கரை, துவரம்பருப்பு, பாமாயில் உடன் விலையில்லா ரேஷன் பொருட்களுக்கான டோக்கன்களை 6ஆம் தேதி முதல் வீடுகளுக்கே சென்று வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே சாதனை:
நான்கு சரக்கு ரயில்களை ஒன்றாக இணைத்து சுமார் 3 கி.மீ நீளமுள்ள ரயிலை இயக்கி இந்திய ரயில்வே சாதனை படைத்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில்...:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜூலை 31ஆம் தேதி வரை தடை:
இந்தியாவில் ஜூலை 31ஆம் தேதி வரை சர்வதேச விமான சேவைக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
UGC அறிவிப்பு:
இந்தியா முழுவதும் இந்த ஆண்டு புதிய கல்லூரிகள், புதிய பாடப்பிரிவுகளுக்கு அனுமதி கிடையாது என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி உற்சாக பேச்சு:
நமது ராணுவத்தின் வீரத்தை பார்த்து நாடே பெருமை கொள்வதாக லடாக்கில் வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உற்சாகமாக இன்று உரையாற்றினார்.
ட்விட்டர் அறிவிப்பு:
அனைவரும் முகக்கவசம் அணிந்தால் ட்விட்டரில் எடிட் ஆப்ஷன் தரப்படும் என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாவட்டச் செய்திகள்
தலா ரூ.10 லட்சம் நிதியுதவி:
தூத்துக்குடி மாவட்டம் செக்காரகுடி கிராமத்தில், விஷவாயு தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு, தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
அடுத்த ஆண்டிற்கு தள்ளிவைப்பு:
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கு வேண்டுகோள்:
தன் மீதான ஆயுட்கால தண்டனையை குறைக்க வேண்டும் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் அங்கீத் சவான், பிசிசிஐ மற்றும் மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Bright Zoom Today News ஜுலை 03 மாலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
July 03, 2020
Rating:
Reviewed by Bright Zoom
on
July 03, 2020
Rating:

No comments: