Bright Zoom Today News ஜுலை 07 காலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
ஜுலை 07 காலை நேரச் செய்திகள்


செமஸ்டர் தேர்வுகளை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி - செய்திகள் !


உலகச் செய்திகள்
மூன்று மாதங்களுக்குப் பிறகு:

இலங்கையில் மூன்று மாதங்களுக்குப் பிறகு நேற்று (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

சீனா மிகப் பெரிய சேதத்தை விளைவித்து விட்டது-அதிபர் டிரம்ப்:

அமெரிக்காவிற்கும், உலக நாடுகளுக்கும் சீனா மிகப் பெரிய சேதத்தை விளைவித்து விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

மாநிலச் செய்திகள்
மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி:

நாடு முழுவதும் அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வு நடத்த, மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ள நிலையில், இறுதியாண்டுத் தேர்வுகளை செப்டம்பர் மாதத்திற்குள் நடத்த வேண்டும் என யுஜிசி தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு மார்ச் வரை:

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டித்துள்ளது.

வருகின்ற 31ஆம் தேதிக்குள் கையெழுத்தாக வாய்ப்பு:

மதுரையில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் வருகின்ற 31ஆம் தேதிக்குள் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இனி மாற்றம் செய்ய முடியாது:

இணையதளத்திலோ அல்லது சார்பதிவாளர் அலுவலகத்திலோ ஆவணப்பதிவிற்கான முன்பதிவு டோக்கனை இனி மாற்றம் செய்ய முடியாது, என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஜூலை 19ஆம் தேதி வரை ரத்து:

சென்னை-கொல்கத்தா-சென்னை இடையேயான 10 விமான சேவைகள் வரும் ஜூலை 19ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

18 நிறுவனங்களின் உரிமம் ரத்து:

தமிழகம், கேரளாவில் 16 உர நிறுவனங்கள், இரு தேயிலை தொழிற்சாலை என 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தவறு நேர்ந்தால் முறையீடு செய்யலாம்:

மின்சாரக் கட்டணத்தை அளவிடுவதில் தவறுகள் ஏதேனும் நேர்ந்தால் அதற்குரிய முறையீட்டை செய்யலாம் என்று மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்துள்ளார்.

மாவட்டச் செய்திகள்
முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டுகிறார்:

அரியலூர் மாவட்டத்தில் புதிதாக அமையவுள்ள மருத்துவக்கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) அடிக்கல் நாட்டுகிறார்.

பொதுப்பணித்துறை திட்டம்:

சென்னை மாநகரின் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்த திருத்தணி அருகில் 3 புதிய தடுப்பணைகளை கட்ட பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது.

நாளை முதல்:

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நாளை (ஜூலை 08) முதல் 10 நாட்களுக்கு முழு பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

36 சதவீதம் குறைவு:

சென்னை உள்ளிட்ட 7 முக்கிய நகரங்களில் கடந்த 6 மாதங்களில் அலுவலகங்களுக்கு குத்தகை விடுவது 36 சதவீதம் குறைந்துள்ளது.

விளையாட்டுச் செய்திகள்
பார்முலா 1 கார் பந்தயம்:

ஆஸ்திரியா கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தின் முதல் சுற்றில், மெர்சிடிஸ் அணி வீரர் வால்டெரி போட்டாஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.



Bright Zoom Today News ஜுலை 07 காலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  ஜுலை 07 காலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on July 07, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.