Bright Zoom Today News ஜுலை 06 மாலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
ஜுலை 06 மாலை நேரச் செய்திகள்


நவம்பர் மாதம் வரை இலவசம்... தமிழக அரசு அறிவிப்பு - முக்கியச் செய்திகள் !

உலகச் செய்திகள்
இஸ்ரேல் அரசு விண்ணில் ஏவியது:

எதிரி நாடுகளை துல்லியமாக கண்காணிக்கும் அதிநவீன செயற்கைக்கோளை இஸ்ரேல் அரசு இன்று விண்ணில் ஏவியுள்ளது.

எலிகளின் மூலம் பரவும் பூபானிக் பிளேக் நோய்:

சீனாவின் மங்கோலியா கோவ்ட் தன்னாட்சி பிரதேசத்தில் உள்ள பேயன்னூர் நகரில் எலிகளின் மூலம் பரவும் பூபானிக் பிளேக் நோய் இரண்டு பேருக்கு ஏற்பட்டுள்ளதாக அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

3 மாதங்களுக்கு இலவசம்:

சவுதி அரேபியாவில் காலாவதியான பணி விசாவை 3 மாதங்களுக்கு இலவசமாக நீட்டித்து மன்னர் சல்மான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மாநிலச் செய்திகள்
நவம்பர் மாதம் வரை:

அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ஏற்கனவே ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் வழங்கப்பட்ட அரிசி அளவின்படி நவம்பர் மாதம் வரை, ரேஷனில் விலையின்றி அரிசி வழங்கப்படும் என தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

புதிய பாடத் தொகுப்பு திட்டம் ரத்து:

தமிழகத்தில் 11, 12ஆம் வகுப்புகளில் நடப்புக் கல்வியாண்டில் அறிமுகம் செய்யவிருந்த புதிய பாடத் தொகுப்பு திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய முறையே தொடரும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இன்று முதல் மீண்டும் தொடங்கியது:

தமிழகத்தில் வீடு வீடாக சென்று மின்சார பயன்பாட்டினை அளவிடும் பணி இன்று முதல் மீண்டும் தொடங்கியது.

ஜூலை 15ஆம் தேதிக்குள்.. மத்திய அரசு தெரிவிப்பு:

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக ஜூலை 15ஆம் தேதிக்குள் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சூரியஒளி மின்னுற்பத்தி திட்டம்:

கோல் இந்தியா, என்எல்சி இணைந்து 12,000 கோடி ரூபாய் முதலீட்டில் 3,000 மெகாவாட் சூரியஒளி மின்னுற்பத்தி திட்டத்தை செயல்படுத்த உள்ளன.

ரயில்வே நிர்வாகம் பேச்சுவார்த்தை:

கட்டுமான பணிகள் பாதிக்கப்படுவதால் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள புலம்பெயர் தொழிலாளர்களை திருப்பி அனுப்புமாறு, மாநில அரசுகளுடன் ரயில்வே நிர்வாகம் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளது.

மாவட்டச் செய்திகள்
மருத்துவர்களுக்கு புதிய உடை கண்டுபிடிப்பு:

சென்னை ஐஐடி-யில் ஒரு மைக்ரான் அளவு தூசியைக் கூட வடிகட்டக் கூடிய புதிய உடையை வடிவமைத்துள்ளனர். செல்லுலோஸ் காகிதத்தில் நைலான் பாலிமரை நானோ கோட்டிங் முறையில் பூசி புதிய உடை உருவாக்கப்பட்டுள்ளது.

நகைக்கடைகள் அடைக்கப்படுவதாக அறிவிப்பு:

திண்டுக்கல் மாவட்டத்தில் 10 நாட்களுக்கு நகைக்கடைகள் அடைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுச் செய்திகள்
வரும் வெள்ளிக்கிழமை:

ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை ஒத்திவைப்பது குறித்து, வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள ஐசிசி கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.



Bright Zoom Today News ஜுலை 06 மாலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  ஜுலை 06 மாலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on July 06, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.