Bright Zoom Today News ஜுலை 11 காலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
ஜுலை 11 காலை நேரச் செய்திகள்


விலையில்லா புத்தகம், கல்வி உபகரணங்கள்... தமிழக அரசு அரசாணை வெளியீடு - செய்திகள் !

உலகச் செய்திகள்
பார்லிமெண்ட் தேர்தல்:

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் நேற்று நடந்த பார்லிமெண்ட் தேர்தலில் ஆளும் பீப்பிள் ஆக் ஷன் கட்சி மொத்தமுள்ள 93 இடங்களில் 83 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்தது.

120 நாட்களுக்கு தடை :

பிரேசிலில், அமேசான் காடுகளில் மரங்களை வெட்டியபின் தீ வைக்க 120 நாட்களுக்கு தடை விதிக்க அந்நாட்டு அரசால் திட்டமிடப்பட்டுள்ளது.

படைகளை வாபஸ் பெற முடிவு:

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்டும் வகையில் இருதரப்பு படைகளையும் முழுமையாக விலக்கிக் கொள்ள இந்தியாவும், சீனாவும் ஒப்புக் கொண்டுள்ளன. இருநாட்டு வெளியுறவுத் துறை உயரதிகாரிகள் இடையே நேற்று இணையவழியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மாநிலச் செய்திகள்
தமிழக அரசு அரசாணை வெளியீடு:

பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு விலையில்லா புத்தகம், கல்வி உபகரணங்கள் வழங்கும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நாளை:

இம்மாதம் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் முழு பொதுமுடக்கம் அமலில் இருக்கும் என்று அரசு அறிவித்தபடி நாளை கடைகள் யாவும் அடைக்கப்பட உள்ளன. காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் நாளை கிடைக்காது. பால், மருந்துக் கடைகள், மருத்துவமனை போன்றவற்றுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மிதமான மழை பெய்யக்கூடும்:

தமிழகத்தில் அதிக இடங்களில் இன்று (ஜூலை 11) மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முதல்வர் பழனிசாமி அறிவிப்பு:

மறைந்த முன்னாள் நிதியமைச்சர் இரா.நெடுஞ்செழியனின் பிறந்த தினமான ஜூலை 11ஆம் நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் எனவும், அவருக்கு சென்னை சேப்பாக்கத்தில் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும் எனவும் தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக அரசு ஆணை பிறப்பிப்பு:

25 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 51 காவல்துறை அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்தும், அவர்களில் சிலருக்கு பணி உயர்வு வழங்கியும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

கல்லூரி தேர்வுகள் ரத்து:

கர்நாடகத்தில் கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் அறிவித்துள்ளார்.

மாவட்டச் செய்திகள்
கலெக்டர் மெகராஜ் தெரிவிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசு அறிவித்தபடி இரவு 8 மணி வரை கடைகளை நடத்திக்கொள்ளலாம் என்றும், சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

நிவாரணம் வீடு தேடி சென்று வழங்கப்படும்:

தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 நிவாரணம் வீடு தேடி சென்று வழங்கப்படும், என ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

விளையாட்டுச் செய்திகள்
புதிய தலைவர் தேர்ந்தெடுப்பு:

ஹாக்கி இந்தியா தலைவர் பதவியை முஸ்தாக் அகமது ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக சீனியர் துணைத்தலைவராக இருந்த மணிப்பூரை சேர்ந்த ஞானேந்திர நிகோம்பாம் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Bright Zoom Today News ஜுலை 11 காலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  ஜுலை 11 காலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on July 11, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.