Bright Zoom Today News ஜுலை 11 மாலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
ஜுலை 11 மாலை நேரச் செய்திகள்


வரும் 14ஆம் தேதி... தமிழக அமைச்சரவைக் கூட்டம் - முக்கியச் செய்திகள் !

உலகச் செய்திகள்
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பாராட்டு:

நிலையான எதிர்காலத்தை எப்படி உருவாக்குவது? என்பது குறித்து இந்தியாவிடம் உலக நாடுகள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியா கூடுதல் விமானங்களை இயக்க உள்ளதாக அறிவிப்பு:

இந்தியாவில் இருந்து ஜெர்மனிக்கு வரும் ஜுலை 21 மற்றும் 23ஆம் தேதிகளில் ஏர் இந்தியா கூடுதல் விமானங்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

மாநிலச் செய்திகள்
தமிழக அமைச்சரவைக் கூட்டம்:

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 14ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செமஸ்டர் தேர்வுகள் ரத்து:

டெல்லியில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியா அறிவித்துள்ளார்.

அமைச்சர் செங்கோட்டையன் தெரிவிப்பு:

பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றி தற்போது சிந்திக்கவே இல்லை என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் மாதத்திற்குள் நடத்துவது சாத்தியமில்லை:

தமிழகத்தில் கல்லூரி, பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் செமஸ்டர் தேர்வுகளை செப்டம்பர் மாதத்திற்குள் நடத்துவது சாத்தியமில்லை என தமிழக முதலமைச்சர் கூறியுள்ளார். எனவே, தேர்வுக்கு பதிலாக மாநில அரசுகள் உருவாக்கும் மதிப்பீட்டு முறைகளை அங்கீகரிக்க வேண்டும் என மத்திய அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.

வரும் 14ஆம் தேதி:

டீசல் விலை உயர்வைக் கண்டித்து வரும் 14ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் முருகன் வெங்கடாஜலம் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் வேண்டுகோள்:

ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்கள் 40 பேரை விரைந்து மீட்டுவர நடவடிக்கை எடுக்குமாறு, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொருளாதார பாதிப்பு:

100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

மாவட்டச் செய்திகள்
நாளை முதல் 3 நாட்களுக்கு:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சிக்கு நாளை முதல் 3 நாட்களுக்கு முழு பொதுமுடக்கம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பால் விற்பனை மற்றும் மருந்து கடைகள் மட்டுமே திறந்திருக்கும் என வருவாய் வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

11 மாவட்டங்களில் கனமழை:

திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
பென் ஸ்டோக்ஸ் இடம் பிடித்தார்:

டெஸ்ட் கிரிக்கெட்டில் 4000 ரன்களும், 150 விக்கெட்டுகளும் எடுத்த வீரர்களின் பட்டியலில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இடம் பிடித்துள்ளார்.



Bright Zoom Today News ஜுலை 11 மாலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  ஜுலை 11 மாலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on July 11, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.