Bright Zoom Today News
ஜுலை 13 மாலை நேரச் செய்திகள்
கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் - மாலைச் செய்திகள்..!!
உலகச் செய்திகள்
கூகுள் இந்தியா நிதியுதவி:
இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு உதவிட கூகுள் இந்தியா நிதியுதவி அளித்துள்ளது. இந்தியாவில் அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் ரூ.75,000 கோடி முதலீடு செய்யப்படும் என்று கூகுளின் தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
மாநிலச் செய்திகள்
12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு:
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. ஒட்டுமொத்தமாக 88.78 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு:
காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்:
தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
டெண்டர் அறிவிப்பு:
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை கணினி மயமாக்குவதற்கான டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
ரயில்வே துறை தெரிவிப்பு:
அடுத்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் 200 மெகாவாட் திறன் உள்ள காற்றாலைகள் நிறுவப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து அகலப்பாதைகளும் மின்மயமாக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
உச்சநீதிமன்றம் உத்தரவு:
மருத்துவப்படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 50மூ இட ஒதுக்கீடு வழங்கக் கோரிய தமிழக அரசின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விதிமுறைகள் தளர்வு:
விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கான விதிமுறைகளை தளர்த்தி மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மாவட்டச் செய்திகள்
ஆடி அமாவாசை திருவிழா ரத்து:
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் வரும் 20ஆம் தேதி நடக்கவிருந்த ஆடி அமாவாசை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
மின் உற்பத்தி பாதிப்பு:
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஒரே நேரத்தில் 4 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் 840 மெகாவாட் அளவிற்கு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
லீவிஸ் ஹாமில்டன் வெற்றி:
பார்முலா 1 கார் பந்தயத்தின் 2வது சுற்றான ஸ்டிரியா கிராண்ட் பிரி-யில் மெர்சிடஸ் அணியின் லீவிஸ் ஹாமில்டன் வெற்றி பெற்றார்.

Bright Zoom Today News ஜுலை 13 மாலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
July 13, 2020
Rating:
No comments: