Bright Zoom Today News ஜுலை 14 காலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
ஜுலை 14 காலை நேரச் செய்திகள்


தமிழகம் முழுவதும் வரும் 31ஆம் தேதி வரை தடை - முக்கியச் செய்திகள் !

உலகச் செய்திகள்
இன்று மீண்டும் பேச்சுவார்த்தை:

எல்லை பிரச்சனை தொடர்பாக இந்திய-சீன ராணுவ அதிகாரிகளிடையே இன்று (ஜூலை 14) மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது.

சேனல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை ஓரளவிற்கு நீக்கம்:

இந்திய செய்தி சேனல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை ஓரளவிற்கு நீக்கப்பட்டுள்ளதாக நேபாள டிவி ஆப்ரேட்டர்கள் சங்க துணைத்தலைவர் துர்பா சர்மா கூறியுள்ளார்.

உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை:

உலக நாடுகள் முகக்கவசம் உள்ளிட்ட அடிப்படை சுகாதார நடவடிக்கைகளை கடைபிடிக்க தவறினால் உலகம் மேலும் மோசமடையும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

2வது முறை அதிபர்:

போலந்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர் ஆண்ட்ரேஜ் துடா தொடர்ந்து 2வது முறை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மாநிலச் செய்திகள்
வரும் 31ஆம் தேதி வரை:

தமிழகம் முழுவதும் வரும் 31ஆம் தேதி வரை அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை உத்தரவு:

அனைத்து கல்வி அலுவலகங்களிலும் ஐம்பது சதவீத ஊழியர்கள் தினசரி பணிக்கு வர வேண்டும் என, தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு:

ஃபெட் எக்ஸ் (FEDeX) உட்பட உலகின் 2 முன்னணி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களுக்கும், 3 பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களுக்கும் தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

வரும் செப்டம்பர் வரை:

ஆந்திர மாநிலத்தில் வரும் செப்டம்பர் வரையில் அனைத்து பொது நுழைவுத்தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக மாநில கல்வித்துறை அமைச்சர் ஆதிமுலாப்பு சுரேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது:

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு தலைமை செயலகத்தில் நடைபெறவுள்ளது.

மாவட்டச் செய்திகள்
பாடப்புத்தகங்கள் அனுப்பி வைப்பு:

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 399 பள்ளிகளை சேர்ந்த எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம்:

கடன் உதவி பெற பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் விண்ணப்பிக்கலாம் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
பொதுச்செயலாளர் ராஜீவ் மேத்தா வலியுறுத்தல்:

தேசிய விளையாட்டு சங்கங்களின் நிர்வாக பொறுப்பில் பெண்களுக்கு உரிய பங்களிப்பு அளிக்க தேவையான திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்று இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச்செயலாளர் ராஜீவ் மேத்தா வலியுறுத்தி உள்ளார்.

2 ஆண்டு தடை நீக்கம்:

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் விளையாட மான்செஸ்டர் சிட்டி அணிக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு தடையை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.



Bright Zoom Today News ஜுலை 14 காலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  ஜுலை 14 காலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on July 14, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.