Bright Zoom Today News
ஜுலை 14 மாலை நேரச் செய்திகள்
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. நாளை வெளியீடு - செய்திகள் !
உலகச் செய்திகள்
ஈரான் அரசு அறிவிப்பு:
சாபகர் துறைமுக ரயில்வே திட்ட ஒப்பந்தத்திலிருந்து இந்தியாவை நீக்குவதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.
மாநிலச் செய்திகள்
ஜூலை 31ஆம் தேதி வரை:
தமிழகத்தில் ஜூலை 31ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
31ஆம் தேதி வரை... மாநில அரசு முடிவு:
வரும் 16ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை பீகாரில் முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்த பீகார் மாநில அரசு முடிவு செய்துள்ளது. இன்று நடந்த உயர்மட்ட அரசு ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
துணை முதல்வர் பதவி... சச்சின் பைலட் நீக்கம்:
ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும், ராஜஸ்தானின் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக கோவிந்த் சிங் டோட்டாஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் கட்சியின் மூத்த தலைவர் ரந்தீப் சிங் அறிவித்துள்ளார்.
நாளை காலை... சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்:
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை காலை வெளியாகும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
அசாம் மாநிலத்தில் தொடரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு:
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 44 பேர் உயிரிழந்துவிட்டனர்.
இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு:
தமிழகத்தில் காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்;ர், வேலூர், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
மாவட்டச் செய்திகள்
குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு:
சாத்தான் குளம் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 போலீசாரையும், 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி வழங்கி மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாளை சென்னை மாநகராட்சி ஆணையர் ஆலோசனை:
பருவமழையை எதிர்கொள்ள செய்ய வேண்டிய பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் நாளை சென்னை மாநகராட்சி ஆணையர் ஆலோசனை நடத்தவுள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
தற்காலிக தலைமை செயலதிகாரி நியமனம்:
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) தலைமை செயலதிகாரியாக பணியாற்றிய ராகுல் ஜோரி தனது பதவியிலிருந்து விலகியதையடுத்து, பிசிசிஐ-யின் தற்காலிக தலைமை செயலதிகாரியாக ஹேமங் அமின் நியமிக்கப்பட்டுள்ளார்.

Bright Zoom Today News ஜுலை 14 மாலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
July 14, 2020
Rating:
No comments: