Bright Zoom Today News ஜுலை 16 காலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
ஜுலை 16 காலை நேரச் செய்திகள்


தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது - செய்திகள் !

உலகச் செய்திகள்
சீனாவிடம் பாகிஸ்தான் ஒப்பந்தம்:

இந்திய-சீன எல்லை பிரச்சனை ஒருபுறம் பேச்சுவார்த்தையில் சென்று கொண்டிருக்க, மறுபுறம் பாகிஸ்தான் தனது கடற்படையை பலப்படுத்த சீனாவிடம் 700 கோடி அமெரிக்க டாலருக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

மாநிலச் செய்திகள்
ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்:

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் நேற்று தொடங்கி வைத்தார். ஆன்லைன் விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை பெறப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வருகின்ற 30ஆம் தேதி வரை கால அவகாசம்:

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மின்சார கட்டணம் செலுத்த வருகின்ற 30ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு:

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் 92.3மூ பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருப்பூர் மாவட்டம் 97.12மூ தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளது.

இந்திய ராணுவம் முடிவு:

ராணுவ வீரர்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு, ஏகே 47 குண்டுகளை தடுத்து நிறுத்தக்கூடிய, ஹெல்மெட்டுகளை வாங்க இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது.

சிபிஎஸ்இ முடிவு:

பேஸ்புக்குடன் இணைந்து, இணைப்பில் நிஜமாக்கல் என்ற முறையில் ஆன்லைனில் பாடம் நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி:

இந்திய ராணுவத்திற்கு ரூ.300 கோடிக்கு உடனடி ஆயுத கொள்முதலுக்கான சிறப்பு நிதி அதிகாரத்தை பயன்படுத்த பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலுக்கு பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

நாடு முழுவதும் செயல்படும்... ஏர் இந்தியா:

ஜூலை 20ஆம் தேதி முதல் ஏர் இந்தியா நிறுவனத்தின் அனைத்து அலுவலகங்களும் நாடு முழுவதும் செயல்பட துவங்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
மாவட்டச் செய்திகள்
கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது:

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

விளையாட்டுச் செய்திகள்
தினசரி 4 ஆட்டங்கள் நடைபெறும்:

கத்தார் நாட்டில் 2022ஆம் ஆண்டு நடைபெற உள்ள பிபா உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் லீக் சுற்றின்போது, தினசரி 4 ஆட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2-வது டெஸ்ட் போட்டி... இன்று தொடக்கம்:

இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று தொடங்குகிறது.

Bright Zoom Today News ஜுலை 16 காலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  ஜுலை 16 காலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on July 16, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.