Bright Zoom Today News
ஜுலை 16 மாலை நேரச் செய்திகள்
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் - செய்திகள் !
உலகச் செய்திகள்
டிக்டாக் உள்ளிட்ட சில செயலிகளை தடை செய்ய கடிதம் :
இந்தியாவை முன்னுதாரணமாகக் கொண்டு டிக்டாக் உள்ளிட்ட சில செயலிகளை தடை செய்ய வேண்டும் என அதிபர் டிரம்பிற்கு அமெரிக்க எம்.பி.க்கள் 25 பேர் இணைந்து கடிதம் எழுதியுள்ளனர்.
ஈரான் அரசு விளக்கம்:
இந்தியாவுடன் சாபஹார் ரயில் பாதை ஒப்பந்தத்தை நாங்கள் போடவேயில்லை என்று ஈரான் அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஆர்பிட்டர் அனுப்பும் திட்டம் ஒத்திவைப்பு:
செவ்வாய் கிரகத்திற்கு ஆர்பிட்டர் அனுப்பும் ஐக்கிய அரபு எமிரேட்டின் திட்டம், வானிலை காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆயத்தம் செய்யும் பணியில் தைவான் அரசு:
சீனாவின் தாக்குதலை எதிர்கொள்ள, முப்படைகளையும் ஆயத்தம் செய்யும் பணியில் தைவான் அரசு ஈடுபட்டுள்ளது.
மாநிலச் செய்திகள்
8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு:
காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு:
மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், 90.66 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு:
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. இந்த மாத பூஜைக்கும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதி:
தமிழகத்தில் வருகின்ற 27ஆம் தேதி நடைபெற உள்ள பிளஸ்-2 மறுதேர்வு முடிந்தவுடன், விரைவில் மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்துள்ளார்.
மாவட்டச் செய்திகள்
வரும் 21ஆம் தேதி ஆர்ப்பாட்டம்:
மின்கட்டண உயர்வை கண்டித்து வரும் 21ஆம் தேதி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இருவேளை உணவு இலவசம்:
வேலூர் மாநகராட்சியில் உள்ள அரசு மலிவுவிலை உணவகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு நாள்தோறும் காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்க வேண்டும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
2வது டெஸ்டில் இருந்து நீக்கம்:
இங்கிலாந்து வீரர்களுக்கான உயிர்-பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறியதால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2வது டெஸ்டில் இருந்து ஆர்சர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் தள்ளிவைப்பு:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வருகின்ற செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட இருந்த ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி தொடர் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
போட்டி அட்டவணை வெளியீடு:
ஆஸ்திரேலியாவில் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெறும் வகையில் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

Bright Zoom Today News ஜுலை 16 மாலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
July 16, 2020
Rating:
No comments: