Bright. Zoom Today News ஜுலை 18 காலை நேரச் செய்திகள்

Bright. Zoom Today News
ஜுலை 18 காலை நேரச் செய்திகள்


தமிழகம் முழுவதும்.. நாளை அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி - செய்திகள்..!!

உலகச் செய்திகள்
முதன்முறையாக...:

சிங்கப்பூரில் மீண்டும் திறக்கப்பட்டுள்ள மிருகக்காட்சி சாலையில், அரிய லெமூர் இன வகை இரட்டை விலங்குகள் முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மாநிலச் செய்திகள்
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவிப்பு:

இந்தியா மற்றும் சீனா இடையிலான எல்லை பிரச்சனையில் பேச்சுவார்த்தையின் மூலம் எந்தளவிற்கு தீர்வு காணப்படும் என உத்தரவாதம் அளிக்க முடியாது. அதே நேரம், நாட்டின் ஒரு அங்குலத்தை கூட உலகின் எந்த சக்தியாலும் எடுத்து செல்ல முடியாது என உறுதியாக கூற முடியும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு:

தெலுங்கானாவில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முழு பொதுமுடக்கம்:

தமிழகம் முழுவதும் நாளை ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படவுள்ளது. மருந்துக் கடைகள், மருத்துவமனைகள், பால் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அறிவிப்பு:

இந்தியாவில் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி-க்கள் வரும் ஜூலை 22ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழக வேளாண்துறை அமைச்சகம் தெரிவிப்பு:

பயிர் கடன் பெற்றுள்ள விவசாயிகள் காப்பீடு செய்ய விரும்பாவிட்டால் அதற்கான மனுவை வங்கிகளில் அளிக்க வேண்டும் என, தமிழக வேளாண்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விரைவில் ஒய்எஸ்ஆர் கிராம கிளினிக்:

ஆந்திரா முழுவதிலும் உள்ள 13,000 கிராமங்களில் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க விரைவில் ஒய்எஸ்ஆர் கிராம கிளினிக் தொடங்கப்பட உள்ளதாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் தெரிவித்துள்ளார்.

மிதமான மழை பெய்யக்கூடும்:

தென்மேற்கு பருவக் காற்றில் ஏற்பட்டுள்ள திசை வேக மாறுபாட்டின் காரணமாக, வட கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று (ஜூலை 18) மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாவட்டச் செய்திகள்
15,000 கடைகள் அடைப்பு:

கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்கக்கோரி நேற்று காலை முதல் கும்பகோணம், திருவிடைமருதூர், நாச்சியார்கோவில், திருப்பனந்தாள், சோழபுரம், சுவாமிமலை, ஆடுதுறை மற்றும் பாபநாசம் உள்ளிட்ட பகுதியில் 15,000 கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
விளையாட்டுச் செய்திகள்
டோக்கியோ ஒலிம்பிக்:

டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டிக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதன் தொடக்க லீக் ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளது.

இங்கிலாந்து அணி டிக்ளேர்:

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது ஆட்டத்தில் டெஸ்டில் சிப்லி, ஸ்டோக்ஸ் ஆகியோரது அபார சதத்தின் உதவியுடன் இங்கிலாந்து அணி 469 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.



Bright. Zoom Today News ஜுலை 18 காலை நேரச் செய்திகள் Bright. Zoom Today News  ஜுலை 18 காலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on July 18, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.