Bright Zoom Today News
ஜுலை 18 மாலை நேரச் செய்திகள்
7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் - முக்கியச் செய்திகள் !
உலகச் செய்திகள்
ஒப்பந்தத்தில் கையெழுத்து:
அமெரிக்காவும், இந்தியாவும் அவசரகால கச்சா எண்ணெய் கையிருப்பிற்கான ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டன.
பழம்பெரும் தேவாலயத்தில் தீ விபத்து:
பிரான்ஸ் நாட்டின் நான்ட் நகரில், கி.பி 15ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழம்பெரும் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தை, கடும் போராட்டத்திற்கு பின் தீயணைப்புத்துறை வீரர்கள் கட்டுப்படுத்தினர்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நம்பிக்கை:
இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு முன் இயல்பு நிலை திரும்பும் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மாநிலச் செய்திகள்
ரயில்வே துறை ரத்து செய்துள்ளது:
சரக்கு போக்குவரத்திற்கான ரயில்பாதையில் சிக்னல், தொலைத்தொடர்பு வசதிகளை செய்துதர சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரயில்வே துறை ரத்து செய்துள்ளது.
புதுச்சேரியில் மாணவர்களுக்கு 4 கிலோ அரிசி:
புதுச்சேரியில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 4 கிலோ அரிசி, ரூ.250 பணமும், 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 4 கிலோ அரிசி மற்றும் ரூ.330 பணமும் வழங்கப்படும் என அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார்.
கனமழைக்கு வாய்ப்பு:
நீலகிரி, கோவை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காவல்துறை பரிந்துரை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் தரிசனத்தை நிறுத்த வேண்டும் என காவல்துறை பரிந்துரைத்துள்ளது.
30ஆம் தேதி... தேர்வு முடிவுகள் வெளியீடு:
12ஆம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு வரும் 27ஆம் தேதி தேர்வு நடத்தப்பட்டு 30ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மத்திய கூட்டுறவு வங்கிகள் முற்றுகை:
ஜூலை 31ஆம் தேதியன்று மத்திய கூட்டுறவு வங்கிகள் முற்றுகையிடப்படும் என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார்.
மாவட்டச் செய்திகள்
வரும் 21ஆம் தேதி தி.மு.க சார்பில் போராட்டம் நடைபெறும்:
மின் கட்டண உயர்வை கண்டித்து வரும் 21ஆம் தேதி தி.மு.க சார்பில் போராட்டம் நடைபெறும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மனித உரிமைகள் ஆணையம் தெரிவிப்பு:
சாத்தான்குளம் வழக்கில் 2 நாட்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
ராகுல் டிராவிட் தெரிவிப்பு:
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் இருந்து 2008ஆம் ஆண்டு தாம் நீக்கப்பட்டபோது கிரிக்கெட் வாழ்க்கை பாதுகாப்பற்றது போன்று உணர்ந்ததாக ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
நடுவர் தீர்ப்பாயம் உத்தரவு:
இந்திய கிரிக்கெட் வாரியம், டெக்கான் சார்ஜர்ஸ் நிறுவனத்திற்கு 4,800 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று நடுவர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Bright Zoom Today News ஜுலை 18 மாலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
July 18, 2020
Rating:
No comments: