Bright Zoom Today News
ஜுலை 20 காலை நேரச் செய்திகள்
கல்லூரிகளில் சேர...ஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. - செய்திகள்..!!
உலகச் செய்திகள்
ராணுவ அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை:
கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வரும் நிலையில், வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் அந்த நாட்டின் மூத்த ராணுவ அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் விண்கலம்:
ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் விண்கலம் தனது செவ்வாய் கிரகத்தை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.
மாநிலச் செய்திகள்
இன்று முதல்:
அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர இணையம் மூலம் விண்ணப்பிக்கும் பணி இன்று தொடங்குகிறது.
இன்று முக்கிய ஆலோசனை:
தேர்வு முடிவுகள், ஆன்லைன் வகுப்பு, பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று (ஜூலை 20) அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழக முதல்வர்.. இன்று அடிக்கல் நாட்டவுள்ளார்:
கீழடியில் அமைக்கப்பட உள்ள அருங்காட்சியகத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை அடிக்கல் நாட்டவுள்ளார்.
மன அழுத்தத்தை குறைக்க பயிற்சி:
மன அழுத்தத்தை குறைக்க அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு 3 நாள் பயிற்சி அளிக்க காவலர் பயிற்சி கல்லூரி டி.ஜி.பி கரன் சின்ஹா உத்தரவிட்டுள்ளார்.
3 வாரங்களுக்கு மூடப்படுவதாக தெரிவிப்பு:
ஒடிசாவில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், பராமரிப்பு பணிகளுக்காக 3 வாரங்களுக்கு மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டச் செய்திகள்
பொதுமக்கள் நீராட தடை:
ஆடி அமாவாசையையொட்டி ராமநாதபுரம் கடற்கரைகளில் தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம், திருப்புல்லாணி, தேவப்பட்டினம், சாயல்குடி கடற்கரைகளில் பொதுமக்கள் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் ஒரு வாரத்திற்கு கடைகள் அடைப்பு:
பட்டுக்கோட்டையில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு பால், மருந்து கடைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என்று வணிகர் சங்கம் கூறியுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
பிசிசிஐ பொது மேலாளர்... பதவி விலகல்:
பிசிசிஐ தலைமை செயல் அதிகாரியாக இருந்த ராகுல் ஜோரி பதவி விலகியதை தொடர்ந்து, பொது மேலாளராக இருந்த சபா கரீமும் பதவி விலகியுள்ளார்.
பிசிசிஐ அறிவிப்பு:
நடப்பு முதல்தர கிரிக்கெட் சீசனில் ரஞ்சி டிராபி, யு-19 வினூ மன்கட் டிராபி மட்டுமே நடத்தப்படும். துலீப் டிராபி, தியோதர் டிராபி, விஜய் ஹசாரே டிராபி, சி.கே.நாயுடு யு-23 தொடர் கைவிடப்படுகிறது. சையது முஷ்டாக் அலி டி20 தொடரை நடத்துவது பற்றி பரிசீலித்து வருவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
உலக கோப்பை டி20 போட்டி:
உலக கோப்பை டி20 போட்டித் தொடரை ஒத்திவைப்பதற்கான முடிவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று அறிவிக்கும் என எதிர்பார்ப்பதாக, பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bright Zoom Today News ஜுலை 20 காலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
July 20, 2020
Rating:
No comments: