Bright Zoom Today News
ஜுலை 20 மாலை நேரச் செய்திகள்
இன்று மாலை 6 மணிக்கு.. ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்குகிறது - செய்திகள்..!!
உலகச் செய்திகள்
இந்தியப் பெருங்கடலில் நுழைந்தது:
சீனாவுக்கு ஒரு வலுவான சமிக்ஞை அளிக்கும் வகையில் அமெரிக்க விமானம் தாங்கிய கப்பல் யுஎஸ்எஸ் நிமிட்ஸ் இந்திய கடற்படை பயிற்சிக்காக இந்தியப் பெருங்கடலில் நுழைந்தது.
மாநிலச் செய்திகள்
இன்று முழு பட்ஜெட் தாக்கல்:
புதுச்சேரி சட்டசபையில் இன்று ரூ.9,000 கோடிக்கான பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார்.
இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது:
அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது.
புதிய தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்:
தமிழகத்தில் 8 நிறுவனங்கள் பத்தாயிரத்து 399 கோடி ரூபாய் முதலீட்டில், 13 ஆயிரத்து 507 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் புதிய தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையொப்பமாகியுள்ளன.
நாளை தொடங்கி வைக்கிறார் மத்திய அமைச்சர்:
மாணவ-மாணவிகளுக்கு மனநலம் பேணுவதற்கான ஆலோசனைகளை வழங்க மனோதர்பன் என்ற திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நாளை தொடங்கி வைக்கவுள்ளார்.
மாவட்டச் செய்திகள்
சென்னை வானிலை ஆய்வு மையம்:
நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும், சென்னை, திருவள்;ர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், விழுப்புரம், நாமக்கல், கரூர், மதுரை, விருதுநகர் ஆகிய 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மெட்ரோ நிறுவனம் அறிவிப்பு:
மெட்ரோ ரயிலை இயக்குவதற்கு தயார் என சென்னை மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இலவச கல்விக்கு விண்ணப்பிக்கலாம்:
ஏழை, எளிய மாணவர்கள் இலவச கல்விக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த வரும் 27ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
ஹங்கேரி பார்முலா 1 கார்பந்தயம்:
ஹங்கேரி பார்முலா 1 கார்பந்தயத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து வீரர் ஹாமில்டன், ஷூமாக்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.

Bright Zoom Today News ஜுலை 20 மாலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
July 20, 2020
Rating:
No comments: