Bright Zoom today News
ஜுலை 28 காலை நேரச் செய்திகள்
விரைவில் வீடு தேடி வரும் அத்தியாவசிய பொருட்கள்... - செய்திகள்...!!
உலகச் செய்திகள்
வங்காளதேச வெளியுறவுத்துறை மந்திரி தெரிவிப்பு:
வங்காளதேசத்திற்கு 10 டீசல் என்ஜின்களை வழங்கிய இந்தியாவிற்கு நன்றி என அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி ஏ.கே.அப்துல் மோமன் தெரிவித்துள்ளார்.
மாநிலச் செய்திகள்
புதிய செயலி அறிமுகம்:
வானிலை முன்னறிவிப்புகளை தெரிவிப்பதற்காக 'மௌசம்" என்ற புதிய செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
கர்நாடகா முதல்-மந்திரி அறிவிப்பு:
ரூ.9 ஆயிரம் கோடியில் கிராமப்புற மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படுவதாக கர்நாடகா முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.
ரூ.2,368 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்:
புதிய நிறுவனங்களின் ரூ.2,368 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார். 8 புதிய நிறுவன திட்டங்களின் மூலம் 24,870 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மத்திய தரக்கட்டுப்பாட்டு இயக்குநர் தெரிவிப்பு:
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 371 பொருட்களுக்கு தரக்கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளதாக, மத்திய தரக்கட்டுப்பாட்டு இயக்குநர் பிரமோத் குமார் திவாரி தெரிவித்துள்ளார்.
வீடு தேடி வரும் அத்தியாவசிய பொருட்கள்:
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடமாடும் ரேஷன் கடைகளை விரைவில் அறிமுகப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
பருவத்தேர்வுகளுக்கான மதிப்பெண் கணக்கீடு அறிவிப்பு:
தமிழ்நாடு பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட உறுப்பு கல்லூரிகளில் பருவத்தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில், ரத்து செய்யப்பட்ட பருவத்தேர்வுகளுக்கான மதிப்பெண் கணக்கீடு முறை குறித்து உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் தெரிவிப்பு:
தங்க நகைகளுக்கு ஹால்மார்க் கட்டாயம் என்ற நடைமுறையை செயல்படுத்துவது அடுத்த ஆண்டு ஜூன் 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு:
2019-2020ஆம் நிதியாண்டில் ஜி.எஸ்.டி இழப்பீடாக 1 லட்சத்து 65 ஆயிரத்து 302 கோடி ரூபாயை விடுவித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
மாவட்டச் செய்திகள்
உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை:
சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு:
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
மழையால் தடை:
இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மான்செஸ்டர் டெஸ்டின் 4-வது நாள் ஆட்டம் மழையால் தடைபட்டது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவிப்பு:
ஐபிஎல் டி20 தொடரை நடத்துவது பற்றி பிசிசிஐ எழுதிய ஒப்புதல் கடிதம் கிடைக்கப் பெற்றதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
Bright Zoom today News ஜுலை 28 காலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
July 28, 2020
Rating:
No comments: