Bright Zoom Today News
ஜுலை 28 மாலை நேரச் செய்திகள்
நாளை முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே... - மாலைச் செய்திகள்...!!
உலகச் செய்திகள்
சீன தூதரகம் தெரிவிப்பு:
சர்வதேச முதலீட்டாளர்களின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களை காக்கும் பொறுப்பு இந்திய அரசுக்கு உள்ளது என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 5-ல் விமான சேவை :
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஜோர்டானில் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் சர்வதேச விமான சேவை தொடங்கும் என அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.
மாநிலச் செய்திகள்
தமிழக அரசு தகவல் தெரிவிப்பு:
நல வாரியங்களில் பதிவு செய்யாதவர்கள் தற்போது பதிவு செய்ய எந்த தடையும் இல்லை என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. தற்போது பதிவு செய்யும் தொழிலாளர்களுக்கும் வரும் மாதங்களில் நிவாரண உதவிகள் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளது.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை:
தமிழகத்தில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது குறித்து சென்னையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
மேற்கு வங்கத்தில் வாரத்திற்கு 2 நாட்கள்:
மேற்கு வங்கத்தில் வாரத்திற்கு 2 நாட்கள் என ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். ஆகஸ்ட் 1ஆம் தேதி பக்ரீத் பண்டிகை என்பதால் அன்றைய தினம் பொதுமுடக்கம் அமலில் இருக்காது எனவும் கூறியுள்ளார்.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தெரிவிப்பு:
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் நாடு சந்தித்து வரும் சவால்களை போக்கும் வகையில், உலகின் மிகப்பெரிய ஆன்லைன் ஹேக்கத்தான் எனப்படும் கணிப்பொறி தொடர் நிகழ்வு நடைபெறுகிறது. இந்த தொடரின் இறுதி போட்டி நடைபெறும் ஆகஸ்ட் மாதம் முதல் தேதி அன்று இரவு 7 மணிக்கு பிரதமர் மோடி காணொளி காட்சியின் மூலம் உரை நிகழ்த்த உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையம் அறிவிப்பு:
தேர்தல் தொடர்பான முடிவுகளை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் மட்டுமே அறிவிக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வெளியீடு:
நாடு முழுவதும் பொறியியல் படிப்பு வழங்கும் கல்வி நிறுவனங்கள் மற்றும் அதில் உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கையை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வெளியிட்டுள்ளது.
மாவட்டச் செய்திகள்
திருச்சியில் நாளை முதல்:
திருச்சியில் நாளை முதல் காலை 6 மணியில் இருந்து பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் என வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.
கனமழைக்கு வாய்ப்பு:
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தஞ்சாவூர், திருவாரூர் உட்பட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
கரீபியன் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடர்:
கரீபியன் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 18-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 10-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Bright Zoom Today News ஜுலை 28 மாலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
July 28, 2020
Rating:
No comments: