Bright Zoom Today News
ஜுலை 31 மாலை நேரச் செய்திகள்
நாளை மாலை 4.30 மணியளவில் பிரதமர் மோடி உரை - முக்கியச் செய்திகள் !
உலகச் செய்திகள்
பாகிஸ்தான் படைகள் நடத்திய பீரங்கித் தாக்குதல்:
பாகிஸ்தான் படைகள் நடத்திய பீரங்கித் தாக்குதலை தொடர்ந்து ராணுவத்தை உஷார் நிலையில் இருக்க ஆப்கானிஸ்தான் உத்தரவிட்டுள்ளது.
மாநிலச் செய்திகள்
மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவிப்பு:
புதிய கல்விக்கொள்கையின்படி எந்த மொழியும், யார் மீதும் திணிக்கப்படாது என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு:
தமிழகம் முழுவதும் நாளை முதல் முழு பொதுமுடக்கம் என்பதால் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாளை மாலை 4.30 மணியளவில் பிரதமர் மோடி உரை:
புதிய கல்விக்கொள்கை தொடர்பாக நாட்டு மக்களிடம் நாளை மாலை 4.30 மணியளவில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.
அகில இந்திய வழக்கறிஞர்கள் தகுதி தேர்வு தள்ளிவைப்பு:
ஆகஸ்ட் 16ஆம் தேதி நடக்கவிருந்த அகில இந்திய வழக்கறிஞர்கள் தகுதி தேர்வை தள்ளிவைத்து இருப்பதாக அகில இந்திய பார் கவுன்சில் அறிவித்துள்ளது.
பி.எஸ்-4 ரக வாகனங்களை பதிவு செய்ய தடை:
மறு உத்தரவு வரும் வரை பி.எஸ்-4 என்ஜின் ரக வாகனங்களை பதிவு செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு:
பள்ளிகள் திறக்கும்போது மாணவர்களுக்கு புத்தகம், சீருடை வழங்குவதோடு முகக்கவசமும் வழங்க வேண்டும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
சிறப்பு பாதுகாப்புப்படை பிரிவு:
நீதிமன்ற வளாகங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளிட்ட துறைகளை பாதுகாப்பதற்கு ரூ.1,800 கோடி செலவில் சிறப்பு பாதுகாப்புப்படை பிரிவை உருவாக்க உள்ளதாக உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
மாவட்டச் செய்திகள்
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சேலம், தருமபுரி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தங்கம் ரூ.41,200-க்கு விற்பனை:
தங்கம் விலை தொடர்ந்து 11வது நாட்களாக அதிகரித்து ஒரு சவரன் 41 ஆயிரத்தை தொட்டது. சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.456 உயர்ந்து ரூ.41,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விளையாட்டுச் செய்திகள்
நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் தெரிவிப்பு:
இந்திய அணியின் ரோகித் சர்மா மிகவும் அபூர்வமான பேட்ஸ்மேன் என்று நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லூக்கி பெர்குசன் தெரிவித்துள்ளார்.
Bright Zoom Today News ஜுலை 31 மாலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
July 31, 2020
Rating:
No comments: