Bright Zoom Today News ஆகஸ்ட் 01 மாலை நேரச் செய்திகள்


Bright Zoom Today News
ஆகஸ்ட் 01 மாலை நேரச் செய்திகள்

7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - செய்திகள் !

உலகச் செய்திகள்
டிக் டாக்கை விலைக்கு வாங்கும் மைக்ரோசாப்ட்:

அமெரிக்காவில் டிக் டாக் செயலியைத் தடை செய்ய டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வரும் நிலையில், அதை விலைக்கு வாங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 


இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு:

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சான்றிதழ் பதிவேற்றும் பணி தொடக்கம்:

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்த சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணி தொடங்கியுள்ளது.

விமான பயணிகளுக்கான புதிய விதிமுறைகள் வெளியீடு:

பொதுமுடக்க தளர்வையடுத்து உள்நாட்டு விமான பயணிகளுக்கான புதிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்தியா முழுவதும்...:

இந்தியா முழுவதும் மாணவர்களுக்கு சத்துணவு பொருட்களை அவர்களது வீட்டிற்கே சென்று வழங்க மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உத்தரவிட்டுள்ளார்.

பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்:

புதிய கல்விக்கொள்கை குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டுமென்று பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

நாளை தளர்வுகளற்ற முழு பொதுமுடக்கம்:

தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகளற்ற முழு பொதுமுடக்கம் கடைபிடிக்கப்பட உள்ளது.

ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்:

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் 5 ஆண்டு சட்ட படிப்புகளுக்கு, ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 
மாவட்டச் செய்திகள்
ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை:

சென்னையில் போடப்பட்ட 144 தடை உத்தரவை ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டித்து காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

பொதுமக்களுக்கு தடை:

நாளை ஞாயிற்றுக்கிழமை ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படவுள்ள நிலையில், பொதுமுடக்கம் காரணமாக காவிரி ஆறு படித்துறைகளுக்கு வர பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து ஒரு சவரன் 41,424 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
விளையாட்டுச் செய்திகள்
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர்:

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் நவம்பர் அல்லது அடுத்தாண்டு மார்ச் மாதம் நடைபெறும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி அறிவித்துள்ளார். 

 
Bright Zoom Today News ஆகஸ்ட் 01 மாலை நேரச் செய்திகள் Bright Zoom Today News ஆகஸ்ட் 01 மாலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on August 01, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.