Bright Zoom Today News
ஆகஸ்ட் 03 காலை நேரச் செய்திகள்
கல்லூரிகளில் இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்... - முக்கியச் செய்திகள்...!!
உலகச் செய்திகள்
வருகின்ற 5ஆம் தேதி தேர்தல்:
இலங்கையில் 225 உறுப்பினர்களை கொண்ட அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு வருகின்ற 5ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளதாக இலங்கை தேர்தல் ஆணையத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரியா தெரிவித்துள்ளார்.
மாநிலச் செய்திகள்
திரும்பிச் செல்ல உத்தரவு:
பிரதமருக்கு உச்சபட்ச பாதுகாப்பு வழங்கும் சிறப்பு பாதுகாப்பு படை பிரிவை (எஸ்பிஜி) சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் தங்கள் சொந்த படைகளுக்கு திரும்பி செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் இன்று ஆலோசனை:
புதிய கல்விக் கொள்கை, பள்ளிகளை திறப்பது தொடர்பாக தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை உத்தரவு:
தமிழகத்தில் இன்று முதல் விலையில்லா பாட புத்தகங்கள் மற்றும் புத்தகப்பைகள் பள்ளி மாணவர்களுக்கு விநியோகிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரக்சா பந்தன் பண்டிகை:
சகோதரத்துவத்தை போற்றும் ரக்சா பந்தன் பண்டிகை, நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு:
வடக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை (ஆகஸ்ட் 04) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதால் தென்மேற்கு பருவமழை மேலும் வலுவடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவிப்பு:
100மூ கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சைகை மூலமாக பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மாவட்டச் செய்திகள்
இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள்:
சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படுகின்றன. ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளும் கல்லூரி மாணவர்களின் வருகை, பதிவு செய்யப்பட உள்ளது. 2 மற்றும் 3ஆம் ஆண்டு இளநிலை படிப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகளை சென்னை பல்கலைக்கழகம் தொடங்குகிறது. முதுநிலை 2ஆம் ஆண்டு மாணவர்களுக்கும் இன்று முதல் ஆன்லைன் வகுப்பை சென்னை பல்கலைக்கழகம் தொடங்குகிறது.
விளையாட்டுச் செய்திகள்
இந்திய வீராங்கனைகள் வரவேற்பு:
யுஏஇ-யில் நடக்கவுள்ள ஐ.பி.எல் டி20 தொடரின்போது, மகளிர் ஐ.பி.எல் போட்டிகளும் நடத்தப்படும் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவித்துள்ளதை மிதாலி ராஜ் உட்பட இந்திய வீராங்கனைகள் வரவேற்றுள்ளனர்.
நவம்பர் 10ஆம் தேதி நடைபெறும்:
ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கவுள்ள ஐ.பி.எல் டி20 தொடரின் இறுதிப் போட்டி நவம்பர் 10ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரவு ஆட்டங்கள் இந்திய நேரப்படி 8.00 மணிக்கு பதிலாக 7.30 மணிக்கு தொடங்க உள்ளன. மொத்தம் 10 நாட்களில் மாலை மற்றும் இரவு என தலா 2 ஆட்டங்களை நடத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
Bright Zoom Today News ஆகஸ்ட் 03 காலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
August 03, 2020
Rating:
No comments: