Bright Zoom Today News
ஆகஸ்ட் 03 மாலை நேரச் செய்திகள்
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில்... 17 மாவட்டங்களில்... - செய்திகள்...!!
உலகச் செய்திகள்
இந்திய விமானப்படை முன்னாள் தளபதி தெரிவிப்பு:
ரபேல் போர் விமானங்களை இந்தியா வைத்திருப்பதால் பாகிஸ்தான் போர் விமானங்களை அதன் வான்பரப்பிலேயே தாக்கி அழிக்க முடியும் என இந்திய விமானப்படை முன்னாள் தளபதி பீரேந்தர் சிங் தனோவா தெரிவித்துள்ளார்.
சீனா அறிவிப்பு:
நியூசிலாந்துடனான குற்றவாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாக சீனா அறிவித்துள்ளது.
படகு போக்குவரத்து சேவை அறிமுகம்:
இங்கிலாந்தின் தேம்ஸ் நதியில், பயணிகளுக்கான படகு போக்குவரத்து சேவையை உபேர் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மாநிலச் செய்திகள்
வடக்கு ரயில்வே தெரிவிப்பு:
ராமர் கோவில் மாதிரியை அடிப்படையாக வைத்து கட்டப்படும் அயோத்தி ரயில் நிலையத்தின் முதல் கட்ட பணிகள், அடுத்த ஆண்டு ஜுன் மாதத்தில் நிறைவு பெறும் என வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு:
மனநலம் பாதிக்கப்பட்டு தெருவில் சுற்றி திரிவோரை கண்டறிந்து காப்பகங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில்:
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை:
கேரளாவில் இன்று முதல் வியாழக்கிழமை வரை கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆய்வு:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை ஏற்பாடுகளை உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆய்வு செய்தார்.
இந்திய அளவில் முதலிடம்:
உலக அளவில் சிசிடிவி கேமராக்களை அதிகம் பயன்படுத்தும் முதல் 20 நகரங்களில் 16-வது இடத்திலும், இந்திய அளவில் முதலிடத்திலும் ஐதராபாத் நகரம் இருப்பதாக இங்கிலாந்தின் கம்பாரிடெக் எனும் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு:
ஆன்லைன் வகுப்புகளுக்கு விதிமுறைகள் வகுத்த தமிழக அரசின் அரசாணையை பள்ளிகள் பின்பற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனுமதி வழங்கப்படாது:
திரைப்பட படப்பிடிப்பு நடத்தவும், திரையரங்கை திறக்கவும் தற்போதைக்கு அனுமதி வழங்கப்படாது என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மாவட்டச் செய்திகள்
தங்கத்தின் விலை:
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.41,592-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.3 அதிகரித்து ரூ.5,199-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விளையாட்டுச் செய்திகள்
பிசிசிஐ எச்சரிக்கை:
வயது குறித்த முறைக்கேட்டில் ஈடுபட்டிருக்கும் கிரிக்கெட் வீரர்கள் தானாக முன்வந்து குற்றத்தை ஒப்புக்கொண்டால் பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
Bright Zoom Today News ஆகஸ்ட் 03 மாலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
August 03, 2020
Rating:
No comments: