Bright Zoom Today News ஆகஸ்ட் 04 காலை நேரச் செய்திகள்



Bright Zoom Today News
ஆகஸ்ட் 04 காலை நேரச் செய்திகள்

வங்கி ஊழியர்கள் ஆகஸ்ட் 20ஆம் தேதி வேலை நிறுத்தம் - முக்கியச் செய்திகள்...!!

உலகச் செய்திகள்
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவிப்பு:

அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் டிக்டாக் செயலி சேவையை விலைக்கு வாங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிபர் டிரம்ப் அறிவிப்பு:

டிக்டாக் நிறுவனத்தை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் ஏதேனும் ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு விற்காவிட்டால், அமெரிக்காவில் அதற்கு தடை விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
மாநிலச் செய்திகள்
ஆறு பேர் கொண்ட குழு:

மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள புதிய கல்விக் கொள்கையை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க ஆறு பேர் கொண்ட குழுவை மேற்குவங்க மாநில அரசு அமைத்துள்ளது.

144 தடை உத்தரவு:

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு நாளையுடன் 1 ஆண்டு நிறைவடைவதையொட்டி இன்றும், நாளையும் ஸ்ரீநகர் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 20ஆம் தேதி வேலை நிறுத்தம்:

வங்கிகளில், 100 சதவீத ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து, ஆகஸ்ட் 20ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

புதிய சட்டவரைவு:

அடுத்த 5 வருடங்களில் ஆயுத ஏற்றுமதியை இரண்டு மடங்காக்கும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சகம் புதிய சட்டவரைவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இன்று மழைக்கு வாய்ப்பு:

தமிழகத்தில் தெற்கு ஆந்திரா மற்றும் தெற்கு கர்நாடக பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 16 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாவட்டச் செய்திகள்
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம்:

முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து 1032 கன அடியில் இருந்து 4784 கன அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 கன அடி உயர்ந்துள்ளது.

இ-பாஸ் விண்ணப்பிக்கலாம்:

பிற மாவட்டங்களில் இருந்து, சென்னைக்கு வரும் தொழிலாளர்கள், தங்கள் நிறுவனம் மூலம் இ-பாஸ் விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு... அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து:

சென்னையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக ராஜ்பவன் தெரிவித்துள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை:

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுச் செய்திகள்
5 மண்டல திறனறி குழுக்கள்:

கால்பந்து விளையாட்டில் திறமையான இளம் வீரர்களை கண்டறிவதற்காக 5 மண்டல திறனறி குழுக்களை உருவாக்க உள்ளதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

7வது முறையாக சாம்பியன் பட்டம்:

பிரிட்டிஷ் கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தில் மெர்சிடிஸ் அணி வீரர் லூயிஸ் ஹாமில்டன் (இங்கிலாந்து) 7வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.

 

Bright Zoom Today News ஆகஸ்ட் 04 காலை நேரச் செய்திகள் Bright Zoom Today News ஆகஸ்ட் 04 காலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on August 04, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.