Bright Zoom Today News ஆகஸ்ட் 04 மாலை நேரச் செய்திகள்


Bright Zoom Today News
ஆகஸ்ட் 04 மாலை நேரச் செய்திகள்

தமிழகம் முழுவதும் வரும் 10ஆம் தேதி... கடைகள் அடைப்பு... - முக்கியச் செய்திகள்...!!


உலகச் செய்திகள்
சீன செயலிகளுக்கு தடை:


சீன நிறுவனங்களுக்கு சொந்தமான 59
செயலிகள் தடை செய்யப்பட்ட நிலையில்
தற்போது சீனாவின் அதிமுக்கிய செயலிகளான பாய்டு (Baidu) மற்றும்
வெய்போ (Weibo)வையும் இந்தியா தடை செய்துள்ளது. இதையடுத்து, அவை இரண்டும் பிளே ஸ்டோர் மற்றும் ஐபோன்
ஆப் ஸ்டோர்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

ஆப்பிள் நிறுவனத்தின் மீது சீன நிறுவனம் வழக்கு :

செயற்கை நுண்ணறிவு தொடர்பான தங்களது காப்புரிமையை மீறி விட்டதாக
ஆப்பிள் நிறுவனத்தின் மீது சீன
நிறுவனமான ஷிவோ-ஐ (Xiao-i) சுமார் 10 ஆயிரத்து 800 கோடி ரூபாய்
இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளது.






மாநிலச் செய்திகள்
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு:

பொதுமுடக்கம் காரணமாக மாணவர்களுக்கு சத்துணவில் வழங்கப்படாமல் இருந்த முட்டைகளை வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்வு முடிவுகள் வெளியீடு:

யூபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் இறுதித்தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியானது. இதில் தமிழக மாணவர் கணேஷ்குமார் பாஸ்கர் தேசிய அளவில் 7வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

பிரியங்கா காந்தி வாழ்த்து:

அயோத்தியில் நடக்கவுள்ள ராமர் கோவில் பூமி பூஜை, தேசிய ஒற்றுமைக்கான நிகழ்வாக இருக்கட்டும் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்:

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

144 தடை உத்தரவு:

அயோத்தியில் நடக்கவுள்ள ராமர் கோவில் பூமி பூஜையை அடுத்து, கர்நாடகாவின் கலாபுராகி நகரில் இன்று முதல் வரும் 6ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாவட்டச் செய்திகள்
அதி கனமழைக்கு வாய்ப்பு:

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம்:

நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 19,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 86.67 கன அடியாக அதிகரித்துள்ளது.

வரும் 10ஆம் தேதி:

கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க வலியுறுத்தி, வரும் 10ஆம் தேதி தமிழகம் முழுவதும் காய்கறி, பூ, பழக்கடைகள் மற்றும் மார்க்கெட்டுகள் அடைக்கப்படும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

தண்ணீர் திறக்க உத்தரவு:

பாபநாசம், சேர்வலாறு அணைகளிலிருந்து நாளை தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

விளையாட்டுச் செய்திகள்
டி20 கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு:

அக்டோபர் மாதம் நடைபெற இருந்த ஆஸ்திரேலியா - மேற்கு இந்திய தீவு அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

Bright Zoom Today News ஆகஸ்ட் 04 மாலை நேரச் செய்திகள் Bright Zoom Today News ஆகஸ்ட் 04 மாலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on August 04, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.