Bright Zoom Today News
ஆகஸ்ட் 05 காலை நேரச் செய்திகள்
தமிழகம் முழுவதும்... இன்று தொடங்குகிறது - முக்கியச் செய்திகள் !
உலகச் செய்திகள்
இந்தியா கண்டனம்:
ஜம்மு-காஷ்மீர் மற்றும் குஜராத்தின் சில பகுதிகளை பாகிஸ்தானுடன் இணைத்து, அந்நாட்டு அரசு வெளியிட்ட புதிய வரைபடத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
மாநிலச் செய்திகள்
மாவட்ட கலெக்டர்களுடன் ஆய்வு:
தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு இன்று (புதன்கிழமை) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பயணம் மேற்கொண்டு, தடுப்புப் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆய்வு மேற்கொள்கிறார்.
இன்று ராமர் கோவிலுக்கான பூமி பூஜை:
அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று கோவிலுக்கான அடிக்கல்லை நாட்டுகிறார். இதனால் அயோத்தி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
இன்று தொடங்குகிறது:
தமிழகம் முழுவதும் சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் உள்ள நியாயவிலைக் கடைகளில் தலா இரண்டு முகக்கவசங்களுடன் பொருட்கள் விநியோகம் இன்று தொடங்குகிறது.
அண்ணா பல்கலைக்கழகம் தெரிவிப்பு:
பி.இ இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு, இந்த மாத இறுதியில் நடத்த இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை நீட்டிப்பு:
முதலாம் ஆண்டு டிப்ளமோ படிப்புகளுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சான்றிதழ் பதிவு ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டச் செய்திகள்
முதல்வர் பழனிசாமி உத்தரவு:
நெல்லை மாவட்டத்தில் 3 அணைக்கட்டுகளில் இருந்து நீர் திறந்து விட முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
இன்று (புதன்கிழமை) தொடக்கம்:
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, மான்செஸ்டர் ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல்:
ஐரோப்பிய நாடுகளில் உள்ள கால்பந்து கிளப்புகளுக்கு இடையிலான ருநுகுயு சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்க உள்ளது.
Bright Zoom Today News ஆகஸ்ட் 05 காலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
August 05, 2020
Rating:
No comments: