Bright Zoom Today News
ஆகஸ்ட் 05 மாலை நேரச் செய்திகள்
வரும் 10ஆம் தேதி முதல் அனுமதி.. தமிழக முதல்வர் அறிவிப்பு - செய்திகள்..!!
உலகச் செய்திகள்
ஆப்பிள் நிறுவனம் தெரிவிப்பு:
டிக்டாக் செயலியை வாங்குவதில் தங்களுக்கு ஆர்வம் இல்லை என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாநிலச் செய்திகள்
தமிழக அரசு அனுமதி :
தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அடிக்கல் நாட்டினார் பிரதமர்:
அயோத்தி ராமர் கோவிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.
குடியரசு தலைவர் தெரிவிப்பு:
ராம ராஜ்ஜிய சித்தாந்தங்கள் அடிப்படையில் அமைக்கப்பட்ட நவீன இந்தியாவின் சின்னமாக அயோத்தி ராமர் கோவில் வளாகம் திகழும் என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
தபால் தலை வெளியீடு :
அயோத்தியில் ராமர் கோவில் சிறப்பு தபால் தலையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்.
அதிக கனமழைக்கு வாய்ப்பு :
அடுத்த 5 நாட்களுக்கு தமிழக மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாவட்டச் செய்திகள்
கண்காணிக்க குழு நியமனம்:
திருப்பத்தூரில் சமூக இடைவெளி இல்லாமல் வியாபாரம் செய்யும் கடைகளை கண்காணிக்க கலெக்டர் சிவன்அருள் குழுக்களை நியமித்துள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
நோ பால் குறித்த முடிவு :
இங்கிலாந்து - பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் நோ பால் குறித்த முடிவுகளை 3ஆம் நடுவர் கவனிக்கவுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.
கோல் கீப்பர் ஓய்வு அறிவிப்பு :
ஸ்பெயினின் கால்பந்து அணியை சேர்ந்த உலக புகழ்பெற்ற கோல் கீப்பரான காசில்லாஸ் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Bright Zoom Today News ஆகஸ்ட் 05 மாலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
August 05, 2020
Rating:
No comments: