Bright Zoom today News
ஆகஸ்ட் 06 மாலை நேரச் செய்திகள்
ரெட் அலர்ட் எச்சரிக்கை தொடரும்... வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு - செய்திகள் !
உலகச் செய்திகள்
படைகள் வாபஸ் இல்லை-இந்தியா திட்டவட்டம்:
சீனா தனது படைகளை முழுவதுமாக வாபஸ் பெறும் வரை இந்தியாவும் தனது படைகளை திரும்பப் பெறாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மாநிலச் செய்திகள்
வட்டி விகிதம் நான்கு சதவிகிதமாக தொடரும்:
வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 4 சதவிகிதமாக தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு:
தென்மேற்குப் பருவக்காற்று தீவிரமாவதால் தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், இதனால் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி உரை:
புதிய கல்விக்கொள்கை தொடர்பாக நாளை காணொளி காட்சியின் மூலம் நடைபெறும் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.
தமிழக அரசு உத்தரவு:
மாநிலம் முழுவதும் ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் 20,000 பசுமை வீடுகள் கட்ட 500 கோடியை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளை திறக்க வாய்ப்புகள் இல்லை:
தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க வாய்ப்புகள் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மாவட்டச் செய்திகள்
தங்கம் விலை உயர்வு:
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.42,992-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
புதிய திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல்:
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிய திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.
விளையாட்டுச் செய்திகள்
ஒலிம்பிக் வளையங்கள் தற்காலிகமாக அகற்றம்:
ஜப்பானின் டோக்கியோவில் நிறுவப்பட்டிருந்த ஒலிம்பிக் வளையங்கள் தற்காலிகமாக அகற்றப்பட்டது.
ஐ.பி.எல். போட்டிகளின் புதிய ஸ்பான்சர்:
ஐ.பி.எல். போட்டிகளின் புதிய ஸ்பான்சர்களாக பைஜூஸ் மற்றும் அமேசான் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
Bright Zoom today News ஆகஸ்ட் 06 மாலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
August 06, 2020
Rating:
No comments: