Bright Zoom Today News
ஆகஸ்ட் 07 காலை நேரச் செய்திகள்
தமிழகத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல்... அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு - செய்திகள் !
உலகச் செய்திகள்
இலங்கை நாடாளுமன்ற தேர்தல்:
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா மக்கள் கட்சி அதிக வாக்குகளை பெற்று, அமோக வெற்றி பெற்றுள்ளது.
மாநிலச் செய்திகள்
தமிழகத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல்...:
தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என்றும், அக்டோபர் 28ஆம் தேதி முதல் நடைமுறை தேர்வும், நவம்பர் 9ஆம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் தொடங்கும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு:
தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் திறக்கப்படும் உடற்பயிற்சி கூடங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
பிரதமர் மோடி இன்று உரை:
புதிய தேசிய கல்விக்கொள்கை பற்றிய கருத்தரங்கில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டு தொடக்க உரை ஆற்றுகிறார்.
இ-பாஸ் நடைமுறை எளிமையாக்கப்படும்-முதலமைச்சர்:
தமிழகத்தில் இ-பாஸ் வழங்கும் நடைமுறை எளிமையாக்கப்படும் என்றும், அத்தியாவசிய தேவைக்கு உண்மையான காரணத்தை கூறி இ-பாஸ் பெற்று கொள்ளலாம் என்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மாவட்டச் செய்திகள்
கலைஞரின் 2-வது ஆண்டு நினைவு தினம்:
கலைஞரின் 2-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
போக்குவரத்து மாற்றம்:
சுதந்திர தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியையொட்டி காமராஜர் சாலை, ராஜாஜி சாலை ஆகியவற்றில் நாளை (ஆகஸ்ட் 8) மற்றும் வரும் 10, 13ஆம் தேதிகளிலும், மேலும் சுதந்திர தின விழா அன்றும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
டைட்டில் ஸ்பான்சராக விவோ நிறுவனம் இருக்காது:
இந்த ஆண்டிற்கான ஐபிஎல் டி20 தொடரின் டைட்டில் ஸ்பான்சராக விவோ நிறுவனம் இருக்காது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
No comments: