10 வகுப்பு தமழ் பெருஞ்சித்திரனாரின் அன்னை மொழியே..!

10 வகுப்பு தமழ்

பெருஞ்சித்திரனாரின்

அன்னை மொழியே..!

TNPC போட்டித் தேர்வுகள்..!

Bright Zoom,

Bright Zoom


பொதுத்தமிழ் - தமிழ்த்தொண்டு

 
★ பெருஞ்சித்திரனாரின்
இயற்பெயர் என்ன?
- துரை.மாணிக்கம்

★ பெருஞ்சித்திரனார் வாழ்ந்த காலம்?
- 10.03.1933 - 11.06.1995

★  பெருஞ்சித்திரனார் பிறந்த ஊர்? - சமுத்திரம் (சேலம்)

★  பெருஞ்சித்திரனாரின் பெற்றோர் பெயர் என்ன? - துரைசாமி, குஞ்சம்மாள்

★ பாவலரேறு என்று சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் கவிஞர் யார்? - பெருஞ்சித்திரனார்

★  ‘அன்னை மொழியே’ என்னும் தமிழ்த்தாய் வாழ்த்தின் ஆசிரியர் யார்? - பெருஞ்சித்திரனார்

★  ‘சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்’ என்று பாடியவர் யார்?
- க.சச்சிதானந்தன்

★ தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்களின் ஆசிரியர் யார்?
- பெருஞ்சித்திரனார்

★ பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்புகள் யாவை?
- உலகியல் நூறு, கனிச்சாறு, பாவியக்கொத்து, மகபுகுவஞ்சி, நூறாசிரியம், பள்ளிப்பறவைகள், எண்சுவை எண்பது, கொய்யாக்கனி, ஐயை

★ பெருஞ்சித்திரனாரின் பணிகளில் தமிழுக்குக் கருவூலமாய் அமைந்த நூல் எது?
- திருக்குறள் மெய்ப்பொருளுரை

★ உள்ளத்தில் கனல் மூளச் செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகசைத்துப் பாடியது எது?
- வண்டு

2

★ ‘அன்னை மொழியே’ என்ற கவிதையில் இடம்பெறும் மூவேந்தருள் ஒருவர் யார்?
- பாண்டியன்

★ ‘அன்னை மொழியே’ கவிதை இடம் பெறும் நூல் எது?
- கனிச்சாறு

★  ‘முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே’ என்று பாடியவர்? - துரை.மாணிக்கம்

★ ‘நற்கணக்கே’ என்பதில் சுட்டப்படும் நூல்கள் எத்தனை?
- 18

★  ‘மன்னும் சிலம்பே! மணிமேகலை வடிவே!’ எஞ்சியுள்ள பெருங்காப்பியங்கள் எத்தனை?
- மூன்று

★ பெருஞ்சித்திரனார் பாடலில் ‘பழமைக்குப் பழமை’ என்னும் பொருள் தரும் சொல் எவை? - முன்னைக்கும் முன்னை

★ பெருஞ்சித்திரனாரின் ‘முந்துற்றோம் யாண்டும், தமிழ்த்தாய் வாழ்த்து’ என்னும் இரு தலைப்பிலுள்ள பாடல்கள் எத்தொகுப்பிலிருந்து எடுத்தாளப் பெற்றன?
- கனிச்சாறு

★  ‘செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகார்ந்த அந்தும்பி பாடும் அதுபோல’ பயின்று வரும் அணி எது?
- உவமையணி

★ செந்தமிழ், செந்தாமரை ஆகிய சொற்களில் இடம் பெறும் இலக்கணக் குறிப்பைச் சுட்டுக?
- பண்புத்தொகை

★ ‘அன்னை மொழியே’ என்ற பாடலில் அமைந்துள்ள விளிச்சொற்களை எழுதுக?
- செந்தமிழே!, மாண்புகழே!, நறுங்கனியே!, எண்தொகையே!, பேரரசே!, நற்கணக்கே!, தென்னன் மகளே!, சிலம்பே!

★ பள்ளிப்பறவைகள் எத்தனை பிரிவாக அமைந்துள்ளது?
- 3 (குஞ்சுகளுக்கு, பறவைகளுக்கு, மணிமொழிமாலை)

★ ஏட்டுக் கல்வியறிவுடன் -------------- கல்வியறிவும் தேவை.
- தொழில்

★ இசையால் --------- மறைந்து போகும்.
- துன்பங்கள்

போட்டித் தேர்வுகள் - 2022 !!!

பொதுத்தமிழ் - தமிழ்த்தொண்டு

பெருஞ்சித்திரனார் - (பகுதி - 3)!!

★  உலகம் சிறந்து வாழ்வதற்கான வழிகளை காட்டும் மொழி எது? - தமிழ்மொழி

★  தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாவலர் யார்?
- பெருஞ்சித்திரனார்

★  ------------------- பல நூறு ஆண்டுகளைக் கண்டது. - தமிழ்மொழி

★  தமிழ்க்கும்மி பாடலைப் பாடியவர் யார்?
- பெருஞ்சித்திரனார்

★  தமிழ்க்கும்மி பாடல் இடம்பெறும் நூல் எது?
- கனிச்சாறு

★  தாய் மொழியில் படித்தால் ------- அடையலாம்.
- மேன்மை

★ தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் எது சுருங்கிவிட்டது?
- மேதினி

★ பொய்யகற்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
- பொய் + அகற்றும்

★ செந்தமிழின் புகழ் எங்கெல்லாம் பரவ வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்? - எட்டுத்திசைகள்

★ எட்டு + திசை என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது?
- எட்டுத்திசை

★  பொய்யாமை அகற்றும் மொழி எது? - தமிழ்மொழி

★  பாட்டு + இருக்கும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது?
- பாட்டிருக்கும்

★ மேதினி என்பதன் பொருள் என்ன?
- உலகம்


10 வகுப்பு தமழ் பெருஞ்சித்திரனாரின் அன்னை மொழியே..! 10 வகுப்பு தமழ்  பெருஞ்சித்திரனாரின்  அன்னை மொழியே..! Reviewed by Bright Zoom on August 08, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.