கஸ்ட் 08 காலை நேரச் செய்திகள்
வரும் 10ஆம் தேதி முதல் அனுமதி.. தமிழக முதல்வர் உத்தரவு - - முக்கியச் செய்திகள் !!
உலகச் செய்திகள்
45 நாட்கள் கெடுவுடன் டிரம்ப் தடை உத்தரவு:
சீன நிறுவனத்தின் டிக்டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு 45 நாட்கள் கெடுவுடன், தடை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
மாநிலச் செய்திகள்
கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு:
கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், எந்த நேரத்திலும் அணையில் இருந்து விநாடிக்கு 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதால், நதியோரங்களில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி கே.ஆர்.எஸ். அணை நீர்ப்பாசன துறை முதன்மை பொறியாளர் அறிவித்துள்ளார்.
தற்காலிகமாக ஒத்திவைப்பு:
வருகின்ற 10ஆம் தேதி அறிவிக்கப்பட்ட காய்கறி, பூ, பழக்கடை மற்றும் மார்க்கெட் கடையடைப்பு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.
நாளை தளர்வற்ற முழு பொதுமுடக்கம்:
தமிழகத்தில் நாளை தளர்வற்ற முழு பொதுமுடக்கம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்துக் கடைகளும் மூடப்படும். பால் விநியோகம், மருந்தகங்கள், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவமனை ஊர்திகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ராமர் கோவில் கட்டுமான பணிகள் இன்று தொடங்குகிறது:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் இன்று தொடங்குகிறது என்றும், இது மூன்றரை ஆண்டுகளில் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாணவர்களுடன் பிரதமர் மோடி உரையாடல்:
தூய்மை இந்தியா குறித்து இன்று நாட்டின் பல்வேறு பகுதி மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.
புதிய தொழிற்கொள்கை:
வேலைவாய்ப்பையும், உற்பத்தியையும் அதிகரிக்கும் அம்சங்கள் அடங்கிய புதிய தொழிற்கொள்கையை குஜராத் அரசு அறிவித்துள்ளது.
ரூ.1.5 லட்சம் வரை ஊக்கத்தொகை:
மின்சாரத்தில் இயங்கும் கார்களை வாங்குவோருக்கு ரூ.1.5 லட்சம் வரை வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
மாவட்டச் செய்திகள்
வரும் 10ஆம் தேதி முதல்:
மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சிறிய கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளில் வரும் 10ஆம் தேதி முதல் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
வங்கியின் மூலம் கடன்:
பிரதம மந்திரி-கிசான் திட்டத்தின் கீழ், மீன் வியாபாரம் செய்யும் மீனவ மக்களுக்கு வங்கியின் மூலம் கடன் வழங்கப்படுகிறது. சென்னை மாவட்ட மீனவ மக்கள், இதற்கான விண்ணப்பங்களை ராயபுரத்தில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
மத்திய அரசு அனுமதி:
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
நேற்று பயிற்சியை தொடங்கினார்... பி.வி.சிந்து:
பேட்மிண்டன் நட்சத்திரம் பி.வி.சிந்து மூன்றரை மாத இடைவெளிக்குப் பிறகு, கோபிசந்த் அகாடமியில் நேற்று பயிற்சியை தொடங்கினார்.
No comments: