Bright Zoom Today News
ஆகஸ்ட் 08 மாலை நேரச் செய்திகள்
இனி எளிதாக இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம் - முக்கியச் செய்திகள் !
உலகச் செய்திகள்
இந்தியாவின் பெயரை நீக்கவில்லை:
சர்வதேச பயண கட்டுப்பாட்டை அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு தளர்த்திய போதிலும், பயணம் செய்ய தடைவிதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியாவின் பெயரை நீக்கவில்லை.
மாநிலச் செய்திகள்
மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் விளக்கம்:
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் விமானங்களில் எந்தவித கோளாறும் இல்லை என மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
ரூ.10 லட்சம் நிவாரணம்... மத்திய அமைச்சர் அறிவிப்பு:
கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும் என்றும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம், சிறு காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார்.
புதிய தலைமை கணக்கு தணிக்கையாளர்:
இந்தியாவின் புதிய தலைமை கணக்கு தணிக்கையாளராக ஜி.சி.முர்மு பதவியேற்றுள்ளார்.
விரைவில் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்படும்:
தமிழக அரசின் சத்துணவு திட்டத்தின் கீழ் விரைவில் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்படும் என்று சத்துணவுத்துறை அமைச்சர் சரோஜா கூறியுள்ளார்.
உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும் சாத்விக் உணவுகள்:
உடல் ஆரோக்கியமாக இருக்க அனைவரும் சாத்விக் வகை உணவுகளை உண்ண வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அறிவுறுத்தியுள்ளார்.
தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுரை:
கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் விபத்திற்கு உள்ளான விமானத்தில் பயணித்த பயணிகள், மீட்புப் படையினர், பொதுமக்கள் உட்பட 500 பேரை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டச் செய்திகள்
தங்கத்தின் விலை சற்று குறைந்தது:
இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.288 குறைந்து ஒரு சவரன் ரூ.43,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.
எளிதாக இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம்:
ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து எளிதாக இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.
அதிக கனமழை பெய்யக்கூடும்:
தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் அதிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7 மாதங்களுக்குப் பிறகு:
தேனி மாவட்டம், தமிழக கேரளா எல்லையில் உள்ள சுரங்கனாறு அருவிக்கு 7 மாதங்களுக்குப் பிறகு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
வைல்டு கார்டு சலுகை:
அமெரிக்க ஓபன் டென்னிஸில் பங்கேற்க முர்ரே மற்றும் கிலிஸ்டர்சுக்கு வைல்டு கார்டு சலுகை வழங்கப்பட்டு உள்ளது.
No comments: