Bright Zoom Today News
ஆகஸ்ட் 10 காலை நேரச் செய்திகள்
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது - செய்திகள் !
உலகச் செய்திகள்
செப்டம்பர் முதல் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்:
இங்கிலாந்தில் செப்டம்பர் முதல் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தி உள்ளார்.
மாநிலச் செய்திகள்
கேரளாவில் பெய்து வரும் தொடர் மழை:
கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையால் அணைகள் நிரம்பி, ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகளில் மழைநீர் சூழ்ந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்:
சென்னையையும், போர்ட்பிளேரையும் இணைக்கும் நீர்மூழ்கி கண்ணாடி இழை கேபிள் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்:
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அரசு தேர்வுகள் இயக்ககம் இணையதளத்தில் வெளியிட்டது. மேலும்,www.tnresults.nic.in www.dge1.tn.nic.in. ஆகிய இணையதள முகவரியில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
மத்திய அரசு அதிரடி தடை:
சிறிய ரக பீரங்கிகள், சரக்கு விமானங்கள் உட்பட 101 வகையான நவீன ராணுவ தளவாடங்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு அதிரடி தடை விதித்துள்ளது.
பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி:
மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய கோவில்கள், வழிபாட்டு தலங்கள் இன்று (ஆகஸ்ட் 10) முதல் திறக்கப்பட்டு, பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தேசிய விருது... ஆகஸ்ட் 15ஆம் தேதி:
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்த தனி நபர் மற்றும் நிறுவனங்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும் தேசிய விருதிற்கு, ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு:
டெல்லியில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மற்றும் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாவட்டச் செய்திகள்
1000 கன அடி நீர் வெளியேற்றம்:
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 7,453 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக 1,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
விளையாட்டுச் செய்திகள்
சென்னை பயிற்சி முகாமில் பங்கேற்பு:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புறப்படும் முன்பாக சென்னையில் பயிற்சி முகாமில் பங்கேற்க உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பார்சிலோனா அணி தகுதி:
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி தொடரின் கால் இறுதியில் விளையாட பார்சிலோனா அணி தகுதி பெற்றுள்ளது.
No comments: