Bright Zoom Today News
ஆகஸ்ட் 11 காலை நேரச் செய்திகள்
தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்க அனுமதி - முக்கியச் செய்திகள் !
உலகச் செய்திகள்
லெபனான் நாட்டு பிரதமர் ராஜினாமா:
வெடிவிபத்திற்கு பொறுப்பேற்று லெபனான் நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
மாநிலச் செய்திகள்
9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் விண்ணப்பம் விநியோகம்:
புதுவை அரசுப் பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பம் விநியோகிக்கப்படுகிறது.
போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆலோசனை:
தமிழகத்தில் வரும் 15ஆம் தேதிக்கு பிறகு பேருந்து சேவையை தொடங்குவது குறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதையொட்டி அனைத்து போக்குவரத்து கழகங்களும் தயார் நிலையில் உள்ளன.
பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்க அனுமதி:
தேசியமயமாக்கப்பட்ட வழித்தடங்களில், அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி:
நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி வழக்கமான உற்சாகத்துடன் இன்று கொண்டாடப்படுகிறது. வீடுகள் தோறும் குழந்தைகளை கண்ணனாகவும், ராதையாகவும் அலங்கரித்து பகவான் கிருஷ்ணருக்கு உகந்த பிரசாதங்களைப் படையலிட்டும் மகிழ்கின்றனர்.
சுங்கவரியை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்:
சீனாவில் இருந்து இறக்குமதியை கட்டுப்படுத்தும் நோக்கில் லேப்டாப், கேமரா உள்ளிட்ட குறிப்பிட்ட 20 பொருட்களுக்கான சுங்கவரியை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மேற்கு வங்காள அரசு தடை:
சென்னை உட்பட 6 நகரங்களில் இருந்து கொல்கத்தா வரும் விமானங்களுக்கு வருகின்ற 31ஆம் தேதி வரை மேற்கு வங்காள அரசு தடை விதித்துள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி:
தமிழகத்தில் தொழில் துவங்க யார் முன் வந்தாலும், ஒற்றைச்சாளர முறையில் குறிப்பிட்ட காலத்திற்குள் அனுமதி அளிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.
நீரின் அளவு குறைப்பு:
கர்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரியாற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 30,791 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
மாவட்டச் செய்திகள்
தெற்கு ரயில்வே சோதனை:
சென்னை-அரக்கோணம்-ரேணிகுண்டா மற்றும் சென்னை-கூடூர் மார்க்கங்களில் இன்று (ஆகஸ்ட் 11), நாளை (ஆகஸ்ட் 12) ஆகிய இரு நாட்களுக்கு 143கி.மீ. வேகத்தில் ரயில்களுக்கான அதிவேக சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
மத்திய அரசின் ஒப்புதல்:
ஐபிஎல் டி20 தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) நடத்துவதற்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளதாக ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.
பியோனா பெர்ரோ சாம்பியன்:
இத்தாலியில் நடந்த பாலெர்மோ ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டித் தொடரின் ஒற்றையர் பிரிவில், பிரான்ஸ் வீராங்கனை பியோனா பெர்ரோ சாம்பியன் பட்டம் வென்றார்.
No comments: