Bright Zoom Today News
ஆகஸ்ட் 11 மாலை நேரச் செய்திகள்
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும்... வருகின்ற 17ஆம் தேதி முதல் - செய்திகள் !
உலகச் செய்திகள்
வெடித்து சிதறிய மவுண்ட் சினாபங் எரிமலை:
இந்தோனேசியாவில், கடந்த 3 நாட்களில் தொடர்ந்து இரண்டாவது முறையாக சுமத்ரா தீவில் உள்ள மவுண்ட் சினாபங் எரிமலை வெடித்து சிதறியது.
செயற்கைக்கோள் படத்தை வெளியிட்டது நாசா:
லெபனான் வெடிவிபத்தால் ஏற்பட்ட சேதத்தை செயற்கைக்கோள் தரவைப் பயன்படுத்தி வரைபடமாக நாசா வெளியிட்டுள்ளது.
மாநிலச் செய்திகள்
உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு:
ஆண்களை போலவே பெண்களுக்கும் சொத்துரிமையில் சம பங்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
விரைவில் அறிமுகம்:
தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் செலுத்தி மது வாங்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
வருகின்ற 17ஆம் தேதி முதல்:
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் 1, 6 மற்றும் 9ஆம் வகுப்புகளுக்கு வருகின்ற 17ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை துவங்கும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை:
அரபிக் கடலில் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதிகளில் 50-60கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அரபிக் கடல் பகுதிகளில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
எந்த மாநிலத்தின் மீதும் மொழியை திணிக்கவில்லை:
புதிய கல்விக்கொள்கை, எந்த மாநிலத்தின் மீதும் மொழியை திணிக்கவில்லை என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமே; பொக்கிரியால் தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு:
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4ஜி இணைய சேவை:
ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு பிறகு ஜம்மு மற்றும் காஷ்மீரில் தலா ஒரு மாவட்டத்திற்கு சோதனை அடிப்படையில் 4ஜி இணைய சேவை அளிக்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாவட்டச் செய்திகள்
நாளை முதல் டிசம்பர் 9ஆம் தேதி வரை:
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து முதல் போக புன்செய் சாகுபடிக்காக நாளை முதல் டிசம்பர் 9ஆம் தேதி வரை தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தங்கம் விலை:
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.984 குறைந்து சவரன் தற்போது ரூ.41,936-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விளையாட்டுச் செய்திகள்
டோனியின் கேப்டன்ஷிப் அணுகுமுறை அருமையானது:
டோனியின் கேப்டன்ஷிப் அணுகுமுறை மற்றும் கோட்பாடுகள் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் புகழாரம் சூட்டியுள்ளார்.
No comments: